காணாமல் போன அண்ணா இராணுவ முகாமில் இருந்து கடிதம் அனுப்பினார். – சகோதரி சாட்சி.

காணமல் போன தனது அண்ணா தான் இராணுவ முகாமில் இருப்பதாக தனக்கு கடிதம் அனுப்பியதாக  தங்கை ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.

மேலும் தமது சாட்சியத்தில் தெரிவிக்கையில் , 
யாழ்.மாநகர சபையில் வேலை செய்து கொண்டிருந்த தவசெல்வம் எனும் எனது அண்ணா கைதடியில் உள்ள எமது வீட்டில் இருந்து 1996ம் ஆண்டு 9ம் மாதம் 8ம் திகதி வேலைக்கு செல்லும் போது செம்மணியில் இருந்த இராணுவ முகாமில் தடுத்து நிறுத்தப்பட்டு விசாரணைக்கு உட்படுத்த பட்டபின்னர் காணாமல் போயுள்ளார்.
அண்ணாவை செம்மணி இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் விசாரணை செய்யும் போது எமது பிரிவு கிராம சேவையாளர் கண்டு உள்ளார். 
அண்ணா காணாமல் போய் சில நாட்களின் பின்னர் அண்ணாவிடம் இருந்து எமக்கு ஒரு கடிதம் வந்தது. அதில் தான் ஒரு இராணுவ முகாமில் இருப்பதாக எழுதி இருந்தார். மீண்டும் தான் கடிதம் போடுவதாக அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். அந்த கடிதத்தின் பின்னர் எந்த கடிதமும் வரவில்லை. என சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

காணாமல் போன அண்ணாவின் துவிச்சக்கர வண்டி இராணுவ முகாமுக்கு அருகில் கிடந்தது. – சகோதரி சாட்சியம்.


கச்சாய் வீதியில் உள்ள இராணுவ முகாமுக்கு அருகில் காணாமல் போன எனது அண்ணாவின் துவிச்சக்கர வண்டி இருந்தது என தங்கை ஒருவர் சாட்சியம் அளித்துள்ளார்.
மேலும் தனது சாட்சியத்தில் குறிப்பிடுகையில் ,  
எனது அண்ணனான கணபதிப்பிள்ளை தவரூபன் இலங்கை போக்குவரத்து சபையில் பணியாற்றி வந்தார். 2006ம் ஆண்டு 8ம் மாதம் 14ம் திகதி வீட்டில் இருந்து ஊரடங்கு சட்டம் தளர்த்தப்பட்ட நேரத்தில் சென்று இருந்தார்.
அவர் வெளியில் சென்று சில நிமிடத்தில் குண்டு சத்தம் ஒன்றும் தொடர்ந்து துப்பாக்கி சத்தமும் கேட்டன. அதனை தொடர்ந்து எமது பிரதேசத்தில் பீல்ட் பைக் குரூப் திரிந்தது மீண்டும் ஒரு மணி நேரம் கழித்து ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்தன.
அவ்வேளை அண்ணா  வீட்டுக்கு வரவில்லை ஊரடங்கு சட்டம் அமுலுக்கு வந்ததால் நாமும் உடனே தேடி போக முடியவில்லை. மறுநாள் மீண்டும் ஊரடங்கு சட்டம் தளர்த்தபட்ட வேளை தேடி சென்ற போது எமது வீட்டுக்கு அருகில் இருந்த இராணுவ முகாமுக்கு அருகில் அண்ணாவின் துவிச்சக்கர வண்டி காணப்பட்டது.
அந்த இராணுவ முகாமில் கேட்ட போது தமக்கு தெரியாது என கூறினார்கள். அண்ணா காணாமல் போய் மூன்று மாதங்களுக்கு பிறகு சாவகச்சேரி புத்தூர் சந்தியில் இருந்த இராணுவ முகாமை சேர்ந்தவர்கள் எமது அம்மாவை அழைத்து அண்ணா தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டனர்.
அதன் பின்னர் அண்ணாவை பற்றிய தகவல் எதுவும் இல்லை என தனது சாட்சியத்தில் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com