காணாமல் போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவின் 14 அமர்வு யாழில் தொடங்கியது

காணாமல் போனவர்களை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் 14வது அமர்வு விசாரணைகள் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. 

யாழ். மாவட்ட செயலகத்தில் நடைபெறும் இந்த அமர்வில், நல்லூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட காணாமல் போனோரின் உறவினர்கள் தமது சாட்சியங்களை பதிவு செய்து வருகின்றார்கள். 

நல்லூர் பிரதேச செயலகத்தில் 235 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. 

அதன்படி காணாமல் போனோரை கண்டறியும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம தலைமையில் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. 

அவற்றில் 130 பேர் சமூகமளித்து காணாமலாக்கபட்டவர்கள் தொடர்பிலான சாட்சியங்களை அளித்தனர்.

அத்துடன் புதிதாக 44 பேர் பதிவுகளை மேற்கொண்டனர். புதிதாக பதிவு மேற்கொண்டவர்களில் 35 பேர் இன்றைய தினம் சாட்சியம் அளித்தனர்.

யாழப்பாணம் பிரதேசம் மற்றும் பருத்தித்துறை, தெல்லிப்பளை, சண்டிலிப்பாய் உள்ளிட்ட பிரதேச செயலகங்களில் இந்த விசாரணைகள் இடம்பெறவுள்ளன. 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com