சற்று முன்
Home / செய்திகள் / காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய இன்னொரு தந்தையும் உயிரிழந்தார்!

காணாமல் ஆக்கப்பட்ட மகனை தேடிய இன்னொரு தந்தையும் உயிரிழந்தார்!

காணாமலாக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த இன்னொரு தந்தை உயிரிழந்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு, ஏழாம் வட்டாரம் சிவநகரை சேர்ந்த சின்னையா நாகராசா என்பவரே நேற்று முன்தினம் (3) உயிரிழந்தார்.

2009 யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட மகனான நகுலேஸ்வரனை தேடிவந்த நிலையில், அவரை காணாமலேயே உயிரிழந்துள்ளார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோர் உயிரிழப்பது கடந்த சில மாதங்களில் அதிகரித்துள்ளது. பிள்ளைகளை தேடும் பெற்றோர்கள் பலர் வயோதிகத்தை அடைந்துள்ள நிலையில், அவர்களின் கோரிக்கைக்கு அரசு இன்னும் செவிசாய்க்காமலேயே உள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் காணாமலாக்கப்பட்ட உறவுகளை தேடி ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் 900 நாட்களை எட்டியுள்ள நிலையில், இந்த போராட்டங்களில் பங்குகொண்ட 14 பேர் உயிரிழந்துள்ளனர். வடக்கு கிழக்கில் பிள்ளைகளை தேடும் பெற்றோரில் 54 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

About kamal Raj

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com