காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை தடுக்கும் முயற்சியில் மஹிந்த அணி!

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்கும் சட்டத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கைச்சாத்திட்டுள்ள நிலையில், அதற்கெதிராக நாடு முழுவதிலும் பிரச்சாரம் செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சி தீர்மானித்துள்ளது.

இது தொடர்பாக ஆராய்ந்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்காக ஒன்றிணைந்த எதிர்கட்சியின் நாடாளுமன்றக் குழுக் கூட்டம் இன்றைய தினம் சிறிலங்கா நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.

அனைத்து வழிகளிலும் அழுத்தங்களைப் பிரயோகித்து, காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலகத்தை அமைக்கும் முயற்சிகளைத் தடுப்பதே பிரதான நோக்கம் என்று ஒன்றிணைந்த எதிர்கட்சி உறுப்பினர்கள் கூறுகின்றனர்.

இதேவேளை நேற்றைய தினம் அம்பாந்தோட்டை வீரகெட்டிய பகுதிக்கு விஜயம் செய்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, சிறிலங்கா படையினரை தண்டிக்கும் நீதிமன்றங்களை விடவும் அதிக அதிகாரங்களை இந்த அலுவலகத்திற்கு அரசாங்கம் வழங்க உத்தேசித்திருப்பதாகவும், இது மிகவும் பயங்கரமான நிலைமை என்றும் எச்சரித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com