காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளின் போராட்டத்துக்குள் கத்தியோடு நுளைந்த மர்ம நபர்

முல்லைத்தீவு மாவட்ட செயலகம் முன்பாக கூடாரம் அமைத்து காணாமல் ஆக்கப்பட்ட தமது
பிள்ளைகளை தேடி உறவுகள் இன்று (12) 400 ஆவது நாளாக தமது தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தை மேற்கொண்டுவருகின்றனர்

இந்நிலையில் அங்கு மக்கள் போராடி வரும் நிலையில் அங்கு சென்ற மர்ம நபரொருவர்
குறித்த போராட்டத்தில் ஈடுபட்டவர்ர்களை தாக்கி கத்தியால் குத்த முயற்ச்சித்த போதும்
உறவுகள் காயங்கள் எதுவுமின்றி தப்பியுள்ளனர்

இருப்பினும் குறித்த நபர் நீங்கள் போராட்டம் செய்வதையும் ஒருக்கா பாப்பம் உங்களை
கொல்லுவான் என மிரட்டியதாகவும் கதிரை மற்றும் அங்கு சமையல் செய்யும் உபகரணங்கள்
மீது கத்தியால் வெட்டியதோடு அவர்களது போராட்டம் எத்தினையாவது நாள் என எழுதி
போடப்பட்டிருந்த மட்டை மீதும் கத்தியால் குத்தியதொடு அங்கு இருந்தவர்கள் அவரை
பிடிக்க பறித்துக்கொண்டு சென்றவேளை அருகிலிருந்த வீதிப்பாதுகாப்பு கடமையில் இருந்த
பொலிசாருடைய உதவியால் கைது செய்யப்பட்டுள்ளார்

மக்கள் மிகவும் அச்சமடைந்த சூழலில் போராட்ட இடத்தில் தமது போராட்டத்தை தொடர்ந்து
வருகின்றனர் அண்மைக்காலமாக மக்கள் தமக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் இருப்பதாக
தெரிவித்தமையும் இவர்களில் போராட்டத்தை முடக்க பலரும் முயன்று வருகின்றமையும்
இதேவேளை குறித்த இடத்துக்கு அமெரிக்க ஊடகவியலாளர் ஒருவர் இன்று வந்து
செய்திசேகரிப்பில் ஈடுபட்டமையும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com