சற்று முன்
Home / செய்திகள் / காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை யாரோ இயக்குகிறார்கள் – சரவணபவனின் கண்டுபிடிப்பு

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளை யாரோ இயக்குகிறார்கள் – சரவணபவனின் கண்டுபிடிப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒரு பகுதியினர் யாருடையதோ பின்னணியில் இயங்குகிறார்கள் என நினைக்கிறோம் என தெரிவித்துள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் யாழ் எம்.பி, சரவணபவன்.

நேற்று யாழில் பாடசாலை கட்டடம் ஒன்றை திறந்து வைத்து உரையாற்றும்போது இதனை தெரிவித்தார்.

“காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தை நாங்கள் தொடர்ந்து பேசி வருகிறோம். பெரிய ஆட்களுடன் பேசும்போது இதை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். எல்லா இடங்களிலும் இதைபற்றி பேசி வருகிறோம் என்பதை நான் கூட இருந்து பார்ப்பதால் தெரிந்து வைத்திருக்கிறேன். ஆனால், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களில் ஒரு பகுதியினர் யாருடையதோ பின்னணியில் இயங்குகிறார்கள் என நினைக்கிறோம்“ என்றார்.

இதேவேளை, சரவணபவன் எம்.பியின் புதல்வி, அமெரிக்காவிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றி வருவதாக சமூக ஊடகங்களில் தொடர்ந்து விமர்சிக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com