காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அவமதித்த ப.ஜ.க தமிழிசை

இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த பாஜகவின் தமிழ்நாடு மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்,
கிளிநொச்சியில் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை அவமதிக்கும் வகையில் நடந்துகொண்டதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
அம் மக்கள் சுமார் 120 நாட்களைத்தாண்டி கிளிநொச்சியில் போராட்டம் நடத்திவருகின்றார்கள். யாழ்ப்பாணம் சென்றிருந்த தமிழிசை சவுந்தராஜன் கொழும்பு செல்லும்வழியில் அம்மக்களைச் சந்திக்காது சென்றிருந்தால்கூட பரவாயில்லை அவர் நடு வீதியில் இறங்கிநின்று அவர்களைப் படம்பிடித்துச் சென்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
எனினும் அவர் தம்மைச் சந்திக்க வரக்கூடும் என எதிர்பார்த்திருந்த மக்களால் தயாரிக்கப்பட்ட மகஜர் ஒன்று வீதியில் சென்று அவரிடம் கையளிக்கப்பட்டுள்ளது. அதன்போது போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் எழுந்துநின்று அவரை நோக்கி கைகூப்பிவணக்கம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
இதேவேளை தமிழிசை இறுதிப்போர் நடந்த முள்ளிவாய்க்காலுக்குச் செல்வதற்குத் திட்டமிட்டிருந்த போதிலும், பாஜக மேலிடத்தின் உத்தரவினால், அந்தப் பயணத்தையும் அவர் கைவிட்டு கொழும்பு திரும்பியுள்ளார்.

கடந்த புதன்கிழமை கொழும்பிற்கு பயணம் மேற்கொண்டிருந்த தமிழிசை சௌந்தர்ராஜன், மறுநாள் யாழ்ப்பாணம் சென்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைத் தனியாகவும், வடக்கு மாகாணசபையின் அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் மற்றும் மாகாணசபை உறுப்பினர்களைத் தனியாகவும் சந்தித்திருந்தார்.
அத்துடன் நல்லை ஆதீன குருமுதல்வரையும் வேறு சில தரப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாயிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com