சற்று முன்
Home / செய்திகள் / காணாமல்போன மீனவரை மீட்டுத்தர வலியுறுத்தி – மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

காணாமல்போன மீனவரை மீட்டுத்தர வலியுறுத்தி – மீன்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம்

ராமேஸ்வரம் செப் 28,

கச்சத்தீவு அருகே   மீன்பிடித்துக் கொன்டிருந்த ராமேஸ்வரம் மீனவர் நடுக்கடலில் மாயமானதால்  அவரை மீட்டுத்தர வழியுறுத்தி உறவினர்கள போராட்டம் நடத்தி வருகின்றனர்  
நேற்று முன்தினம் ராமேஸ்வரத்திலிருந்து  700 க்கும் மேற்பட்ட விசைபடகுகளில் மீனவர்கள் மீன்துறை அதிகாரிகளிடம் மீ;ன்பிடி அனுமதி டோக்கன் பெற்று கடலுக்குச்  சென்றனர் இவர்கள் கச்சத்திவு  கடல்பகுதியில்  மீன்பிடித்துக் கொன்டிருந்த போது அங்கு ரோந்துப்பணியில் ஈடு பட்டு வந்த இலங்கை கடற்படையினர் மீனவர்களை விரட்டியடித்துள்ளனர். அப்போது மலைராஜ் என்பவரது  படகு கடற்படை கப்பல் மோதி  கடலில் முழ்க துவங்கியது படகிருந்த வில்வராஜ் என்ற மீனவர் கடலில் குதித்து தப்பிக்க முயன்றுள்ளதாக கூறப்படுகிறது.

மேலும் படகிலிருந்த   அந்தோணி, ,ஜோசப், சௌந்தரபாண்டி உள்ளிட்ட மூன்று மீனவர்களை மீட்டு தலைமன்னார்  கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றனர். படகை மீட்க நடவடிக்கை எடுத்தவருவதாக கடற்படை வட்டாரங்கள் தெரிவித்தள்ள நிலையில் மாயமான மீனவர் இரண்டு நாட்களாகியும் கரை திரும்பாததால் மீனவரின் உறவினர்கள இன்று ராமேஸ்வரம் மீன்பிடி அனுமதி டோககன் வழங்கும் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர் இதனால் மீன்பிடி அனுமதி டோக்கன வழங்குவதில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதோடு துறைமுகத்தில் பரபபரப்பு ஏற்பட்டுள்ளது 

மீன்பிடிக்கச் சென்ற எனது அப்பா இரண்டு நாட்களாகியும் கரை திரும்ப வில்வை எங்க அப்பாதான் எங்களுக்கு முக்கியம் நாங்க பிழைபபுத்தேடித்தான் இந்த ஊருக்கு வந்தோம் எங்க அப்பா இல்லையென்றால் எங்களுக்கு ஒன்றுமே இல்லை.  ;ஆகவே இந்திய கடற்படை மற்றும் கடலோரகாவல்படையினர் எனது அப்பாவை தேடிக்கன்டு பிடித்து தரவேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்   . 
பேட்டி விஷாலினி மாயமான மீனவரின் மகள் ராமேஸ்வரம்
பேட்டி ராமசாமி  மாயமான மீனவரின் சகோதரர் ராமேஸ்வரம் 
மீன்பிடிக்கச் சென்ற எனது தம்பி இன்னும் கரை திரும்பவில்லை இதனால் குடும்பத்தோடு பசியும் பட்டிணியுமாக வாடி வருகின்றோம் கடலுக்கு அடியில் முழ்கிய படகில் சிக்கி இருக்கலாம் என எங்களுக்கு சந்தேகம் உள்ளது ஆகவே எனது தம்பியை மீட்டுக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இல்லையேல் மீன்பிடி தொழிலாள்ர்களை ஒருங்கிணைத்து போராட்டம் நடத்துவோம் என கூறியுள்ளார் 

About Vakeesam Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com