காணாமல்போனோர் பணியக சட்டத்தில் கையெழுத்திட்டமைக்கு ஐநா வரவேற்பு!

காணாமல்போனோர் அலுவலகச் சட்டத்தில் இலங்கை ஜனாதிபதி கையொப்பமிட்டமையை ஐநா வரவேற்றுள்ளது.

காணாமல்போனோர் பணியகச் சட்டத்தில் மைத்திரிபால சிறிசேன நேற்று(20) கையொப்பமிட்டதாக தனது ருவிற்றரில் பதிவிட்டிருந்தார்.

இது தொடர்பில் ஐநாவின் நிரந்தர வதிவிடப்பிரதிநிதி உமாக்கோலி தனது ருவிற்றரில், காணாமல்போனோர் பணியக சட்டம், வர்த்தமானியில் வெளியிடப்படுவது, இலங்கை மக்களுக்கான முன்நோக்கிய நகர்வின் ஒரு முக்கியமான நடவடிக்கை என்று கூறியுள்ளார்.

அத்துடன், பதில்களுக்காக காத்திருக்கும் குடும்பங்கள், தற்போது, காணாமல்போனோர் பணியகம் விரைவாகச் செயற்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com