காணாமல்போனோர் பணியகச் சட்டத்தில் கையெழுத்திட்டார் மைத்திரி!

காணாமல்போனோர் பணியகச் சட்டத்தில் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கையெழுத்திட்டுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ருவிற்றர் பக்கத்தில் ‘காணாமல்போனோர் பணியகச் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ளேன். இது  நிலையான அமைதிக்கான பாதையில் இலங்கையை இட்டுச் செல்லும் ‘ எனக் குறிப்பிட்டுள்ளார்.

காணாமல்போனோர் பணியகச் சட்டம் கடந்த ஜூன் 21ஆம் நாள் நாடாளுமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது.

இலங்கை ஜனாதிபதி கையொப்பமிட்டதும் இது நடைமுறைக்கு வரவுள்ளது. அத்துடன் இப்பணியகம் இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நேரடிக் கண்காணிப்பிலேயே இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதுகாப்புப் படையினர் மீது நடவடிக்கை எடுப்பதற்காகவே இப்பணியகம் அமைக்கப்பட்டுள்ளது எனக் குற்றச்சாட்டுக்கள் எழுந்தாலும், பாதுகாப்புப் படையினர் மீது எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படமாட்டாது என ஏற்கனவே மைத்திரிபால சிறிசேன தெரிவித்துவிட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com