காணாமற்போனோர் பற்றி அலட்டிக்கொள்ள விரும்பவில்லை – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மைத்திரி உரை

“காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து அவர்களின் உறவுகளுக்கு தீர்வைப் பெற்றுக்கொடுக்க காணாமற்போனோர் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. அது தனது கடமைகளை முன்னெடுத்துள்ளது. அதனால் காணாமற்போனோரின் உறவினர்களின் கோரிக்கைகள் பற்றி நான் அதிகம் பேசத் தேவையில்லை”

இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன யாழ்ப்பாணத்தில் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சென் பற்றிக்ஸ் கல்லூரியில் புதிதாக அமைக்கப்பட்ட தொழில்நுட்ப ஆய்வு கூடத்தை திறந்து வைத்த பின் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் பதிலகைக் கோரி சென் பற்றிக்ஸ் கல்லூரி முன்பாக காணாமற்போனோரின் உறவுகள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com