சற்று முன்
Home / செய்திகள் / காட்சிப்பொருளாக மாறும் ஒதியமலைக் கிராமம் – எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க யாருமில்லை

காட்சிப்பொருளாக மாறும் ஒதியமலைக் கிராமம் – எல்லைக் கிராமங்களைப் பாதுகாக்க யாருமில்லை

வவுனியா முல்லைத்தீவு மாவட்டங்களினதும் வடக்கின் எல்லையாகவும் உள் ஒதியமலைக் கிராமம் இன்று பலருக்கு ஓர் காட்சிப் பொருளாக மட்டும் உள்ளதே அன்றி வட மாகாணத்தின் எல்லைக் கிராமங்களை பாதுகாக்க வேண்டும் என்ற மனநிலையை கான முடியவில்லை. என ஒதியமலை மற்றும் பெரியகுளம் பகுதி மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

குறித்த பிரதேச குறைபாடுகள் தொடர்பில இக் கிராம மக்கள் தெரிவிக்கையில் ,

வட மாகாணத்தின் எல்லைப் பிரதேசங்களில் உள்ள கிராமங்களில் ஓர் கிராமமான ஒதியமலைக் கிராம்ம் வரலாற்றில் பல சாதனைகளும் சோதனைகளையும் சந்தித்த முக்கிய கிராம்ம். இக் கிராமத்தில் யுத்தம் ஆரம்பிக்க முன்பே 154 குடும்பங்களும் அயல. கிராம்மான பெரியகுளத்தில் 117 குடும்பங்களும் வாழ்ந்து வந்தனர்.

1984ம் ஆண்டுவரை அனைத்து வளங்களோடும் போதிய வருமானத்தோடும் வாழ்ந்த இக்கிராமத்தில் 1984-12-02ம் திகதிய இரவுச் சம்பவத்தில் 34 ஆண்கள் படுகொலை செய்யப்பட்டதுடன் இக் கிராமத்தின் இயல்பு நிலையே இழக்கப்பட்டது. இக் கிராமத்தில் இருந்து சுமார் 2 மைல் தொலைவில் 1983ல் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை அபகரித்து மேற்கொள்ளப்பட்ட சிங்களக் குடியேற்றங்களின் ஊடே புகுந்த இராணுவத்தினர் அன்று இந்த மனித அவலத்தை அரங்கேற்றினர்.

அன்றிலிருந்தே இடம்மெயர புறப்பட்ட மக்பள் இன்றுவரைக்கும் அச்சர்திடனேயே கானப்படுகின்றனர். இதன்பிற்பாடு இறுதி யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து நாட்டின் பல பாபத்திலும் சிதறி வாழும் நிலையில் இக் கிராமத்தில் மீளக்குடியமர்விற்கு அனுமதிக்கப்பட்டு இன்றுவரைப்கும் ஒதியமலையில் 57 குடும்பங்களும் பெரியபுளத்தில் 14 குடும்பங்கள் மட்டுமே மீளக்குடியமர்ந்துள்ளனர்.

இவ்வாறு வாழும் மக்களிற்கும் போதிய அடிப்படை வசதிகள் கிடையாது. வீட்டு வசதி இன்றி அவலப்பட்டவேளையில் ஓர் தொண்டு நிறுவனம் ஒதியமலை மற்றும் பெரியகுளம் பகுதியில் 55 வீடுகளை அமைத்துக் கொடுத்தனர். இருப்பினும் ஏனைய எந்த அடிப்படை வசதிகளும் இன்றே வாழும் நிலையில் அண்மையில் வீடுகளிற்கு மட்டும் மின்சாரம் வழங்கப்பட்டுள்ளது.

இங்கு வாழும் ஏனைய 10 குடும்பங்களிற்கு வீட்டுவசதி கிடையாது. இக் கிராமத்திற்கான போக்குவரத்து வசதிகூடக் கிடையாது நெடிங்கேணிப் பகுதி பேரூந்து ஒன்றே வந்து செல்லுகின்றது. இரவு வேளைகளில் யாணைகளின் அச்சம் மிக்க கொடுமையாகவுள்ளது. இதனை அதிகாரிகளிடம் பல தடவை எடுத்துக்கூறியும் எவ்வித பிரயோசனமும் கிடையாது.

ஆனால் அயல் சிங்களக் கிராமத்தினை சுற்றி பாரிய தடுப்பு வேலி அமைத்து பாதுகாக்கப்பட்டுள்ளது. எமது மாணவர்களின் கல்வி நிலையோ மிகக் கொடுமையானது. தரம் 5 வரைக்குமே இங்கே வகுப்புக்கள் உள்ளன. இங்கும் போதிய ஆசிரியர்கள் கிடையாது. ஒர் அதிபரும் ஓர் ஆசிரியரும் மட்டுமே பணியில் உள்ளனர். அதற்கும் மேல் கல்வி கற்பதானால் நெடுங்கேணி அல்லது ஒட்டுசுட்டான் பாடசாலைகளிற்கே செல்லவேண்டும் அவை சுமார் 15 கிலோமீற்றர் தொலைவிற்கே செல்ல வேண்டும்.

இதன் காரணத்தினால் ஆரம்பக் கல்வியில் இருந்தே பிள்ளைகளைப் பெற்றோர் அயல் கிராமங்களின் பாடசாலைகளிலேயே இணைக்கின்றனர். ஒதியமலை ஆரம்ப வித்தியாலயத்தில் இன்று 15 மாணவர்கள் மட்டுமே கல்வி கற்கின்றனர். பெரியபுளம் பாடசாலை இயங்கவே இல்லை. ஆனால் இயங்காத பாடசாலைக்கு முன்னாள் பணிப்பாளர் காலத்தில் 125 அடி நீளத்தில் ஓர் கட்டிடம் அமைக்கப்பட்டு இன்றுவரை பராமரிக்கப்படுகின்றது.

இவ்வளவு இடரின் மத்மியில் வாழும் நிலையிலும் தமிழ் மக்களின் பூர்வீக தாயகப் பிரதேசங்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காகவும் எமது வாழ்வாதார வயல்கள் இப்பகுதியில் இருப்பதனாலும் வாழும் எமது வாழ்வாதாரத்தை உயர்த்த உரியவர்கள் முன் வரவேண்டும்.

எமது கிராமத்தில் ஒரே நாளில் பலர் சாய்க்கப்பட்ட அவலத்தை கூறி நானும் பங்குகொண்டேன் என்பதற்காக போட்டிபோடும் அரசியல் கட்சிகள்கூட எமது அபிவிருத்தியில் போதிய அக்கறை காட்டவில்லை. எனவே அனைவரும் இணைந்து எமது கிராமத்தின் அவலத்தை போக்க முன்வர வேண்டும். எனக் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இது குறித்து ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளரைத் தொடர்பு கொண்டு கேட்டபோது ,

குறித்த கிராமத்தின் பல குறுக்கு வீதிகள் சீரமைக்கப்படவேண்டி உள்ளதோடு இவர்களின் கிராமத்திற்கு மின் இணைப்பும் அண்மையில் வழங்கப்பட்டு வீடுகளிற்கு மின்சாரம் வழங்கப்பட்டுள்ளபோதிலும் வீதிகளிற்கு மின் குமிழ் பொருத்துமாறும் தினம் யாணையால் ஏற்படும் பிரச்சணைக்குத் தீர்வு வழங்குமாறும் இப் பகுதி மக்கள் கோரிக்கை முன் வைத்துள்ளனர்.

யாணைத் தாக்கத்திற்கு பாதுகாப்பு வேலிகள் அமைக்க அடுத்த ஆண்டு நிதி கோரப்பட்டுள்ளது. மின் குமுழ் பொருத்தும் நடவடிக்கைக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுகின்றதுடன் இவர்களிற்கான விவசாய ஊக்குவிப்புத் தொடர்பிலும் ஆராயப்படுகின்றது. என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com