காங்கேசன்துறை – 201 ஏக்கர் காணி விடுவிப்பு

IMG_0641உள்நாட்டு யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்து கடந்த 26 வருடங்களுக்கு மேலாக முகாம்களில் வாழும் வலிவடக்கு காங்கேசன்துறைப் பகுதி மக்களின் மீள் குடியேற்றும் பொருட்டு 201 ஏக்கர் காணிகள் இன்றய தினம் (25) இலங்கைஅரசினால் விடுவிக்கப்பட்டுள்ளன.

காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு அண்மையில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்ற பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மீள் குடியேற்றத்தை உத்தியோக பூர்வமாக அறிவித்து காணி உரிமையாளர்களிடம் காணி பத்திரங்களை வழங்கியுள்ளார்.IMG_0728

வலி..வடக்கில் உள்ள ஜே / 233, ஜே / 234, ஜே / 235, ஜே / 236, குரும்பசிட்டி (ஜே-238), கட்டுவன் (ஜே-242), மற்றும் வறுத்தலை விளான் (ஜே241) ஆகிய பகுதிகளில் உள்ள 201 ஏக்கர் காணிகளே இவ்வாறு பாதுகாப்பு அமைச்சின் செயலாளரால் விடுவிக்கப்பட்டன.

காங்கேசன்துறை பகுதி விடுவிக்கப்படுகின்றமையால் காங்கேசன்துறை ரயில் நிலையம் மக்கள் பாவனைக்காக கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டது.
அத்துடன் வறுத்தலை விளான் பகுதியில் முன்னர் படைமுகாம் அமைக்கப்பட்டிருந்த 12 ஏக்கர் நிலம் மீள்குடியேற்றத்திற்காக மக்களிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் , பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, மீள் குடியேற்ற அமைச்சின் செயலாளர் சிவஞான சோதி , வடமாகாண ஆளூநர் ரெஜினோல்ட் குரே , மாவட்ட செயலாளர் நா.வேதநாயகன்ஆ கியயோர் கலந்து கொண்டு காணி உரிமையாளர்களிடம் காணிப் பத்திரங்களை கையளித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com