காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலை மீள ஆரம்பிக்க நடவடிக்கை

Discussion_2யாழ்ப்பாணம் காங்கேசன்துறை சீமேந்து தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வணிகத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
நேற்று (25) யாழ் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பதில் உள்ள விடயங்கள் தொடர்பாக ஆராயும் கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையில் அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேற்படி சீமெந்து தொழிற்சாலைக்கு தேவையான சுண்ணாம்புக் கற்கள் யாழ்ப்பாணத்தின் எந்ததொரு பகுதியில் இருந்தும் எடுக்கப்படாதென்ற வேண்டுகோள் ஏற்றுக் கொள்ளப்பட்டதற்கமைவாக தொழிற்சாலையை மீளவும் ஆரம்பிப்பதற்கான தீர்மானம் சகல தரப்பினரின் ஆதரவுடன் நேற்றைய கூட்டத்தில் எடுக்கப்பட்டது. மேலும் தொழிற்சாலைக்கு தேவையான தொழிலாளர்கள் யாழ் மாவட்டத்திலிருந்து உள்வாங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் அமைச்சரினால் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதேவேளை ஆனையிறவு உப்பளத் தொழிற்சாலை மற்றும் பரந்தன் இரசாயண தொழிற்சாலைகளையும் விரைவில் ஆரம்பித்து அதிகளவான வேலைவாய்ப்புகளை வடக்கில் உருவாக்க தாம் நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் அமைச்சர் அங்கு குறிப்பிட்டார்.

யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நா.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்களான சரவணபவன், சித்தார்த்தன், சிறிதரன், அங்கஜன் இராமநாதன் மற்றும் மாகாண அமைச்சர்கள் மாகாணசபை உறுப்பினர்கள் விரிவுரையாளர்கள் சூழலியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com