சற்று முன்
Home / செய்திகள் / காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி தந்தையும் மகளும் பலி

காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு சென்ற புகையிரதத்துடன் மோதி தந்தையும் மகளும் பலி

காங்கேசன்துறையிலிருந்து கொழும்பு சென்ற புகைரதத்துடன் மோதி தந்தையும் மகளும் சம்பவ இடத்திலேயே உயிாிழந்த சம்பவம் வேயங்கொட பகுதியில் இன்று காலை இடம்பெற்றுள்ளது.

இன்று காலை 6 மணியளவில் காங்கேசன் துறையிலிருந்து கொழும்பு நோக்கி சென்ற புகையிரதத்துடன் மோட்டார் சைக்கிள் மோதியதாலேயே விபத்து ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த ரத்தொழுகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய தந்தையும் , 11 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.வேயாங்கொட பிரதேசத்திலிருந்து மகளை பரீட்சைக்காக பாடசாலைக்கு அழைத்து செல்லும் வழியிலேயே

விபத்து இடம்பெற்றதாக வேயாங்கொட பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார். சடலங்கள் வத்துபிட்டிவல வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com