கவுத ஹெரா…? மஹிந்த ஹொரா…. கவுத ஹெரா…? மஹிந்த ஹொரா…. – நாடாளுமன்றில் அமளி !!!

நாடாளுமன்றில் இன்று (10) இடம்பெற்றுவரும் விசேட அமர்வின் போது குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. 2018 ஆம் ஆண்டின் முதல் அமைர்வே இவ்வாறு குழப்பத்தில் முடிந்துள்ளது. இதனையடுத்து சபாநாயகர் கரு ஜயசூரிய சபை அமர்வை 10 நிமிடங்கள் ஒத்திவைக்க உத்தரவிட்டார்.

ஒன்றிணைந்த எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை நடுவே வந்து, எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டதால், சபையில் குழப்பமான நிலை தோன்றியது. இதனையடுத்து, கட்சித் தலைவர்கள் மாநாடொன்றுக்கும் சபாநாயகர் அழைப்பு விடுத்தார்.

இன்று மத்திய வங்கி பிணை முறி மோசடி தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை குறித்த விவாதங்களுக்காக விஷேட பாராளுமன்ற அமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது, பிரதமர் உரையாற்றிய வேளை, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் பாராளுமன்றத்தின் நடுப் பகுதிக்கு வந்து, அமளியில் ஈடுபட்டனர்.
அதன்போது ஆளுந்தரப்பினர் கவுத ஹெரா…? மஹிந்த ஹொரா…. கவுத ஹெரா…? மஹிந்த ஹொரா…. என கோசங்கள் எழுப்பியவாறிருந்தனர்.
இதனையடுத்தே, நாடாளுமன்ற அமர்வு தற்காலிகமாக ஒத்திவைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com