கவிழுமா மைத்திரி ஆட்சி ? – ஜீ.எல். பீரிஸ் புதுக் கட்சியில் நூறு பாராளுமன்ற உறுப்பினர்கள் !

basil-took-membership-of-slppஜீ.எல். பீரிஸ் தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது ஊடகச் சந்திப்பு பத்தரமுல்லையில் உள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் கட்சி காரியாலயத்தில் வியாழக்கிழமை (17)  இடம்பெற்றுள்ளது.

இவ் ஊடக சந்திப்பின் போது கட்சியின் முதலாவது உறுப்புரிமையை முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்சவிற்கு வழங்கியபின் கருத்து தெரிவித்த அக்கட்சியின் தலைவர் ஜீ.எல். பீரிஸ், தமது கட்சியில், முதல் கட்டமாக 100 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான உறுப்புரிமைய அட்டைகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பசில் ராஜபக்‌ஷ  தங்களது கட்சியின் உறுப்புரிமை வழங்கும் நடவடிக்கை, நேற்று (16) முதல் ஆரம்பிக்கப்பட்டதாக தெரிவித்தார்.

மலர் மொட்டு சின்னத்தைக் கொண்ட ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் அதிர்ச்சிதரும் முக்கிய முடிவுகள் மகிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினத்தின்போது வெளியிடப்படும் என கட்சித் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com