கள்ளுத் தவறணை 1 1/2 மணி ; தண்ணீர் பிரச்சினை 1 1/2 மணி ; – மக்கள் போராட்டம் ???

 

கள்ளுத்தவறணை குறித்தும் சுன்னாகம் தண்ணீர் பிரச்சினை குறித்தும் தீர்மானங்கள் நிறைவேற்ற சுமார் ஒன்றரை ஒன்றரை மணித்தியாலங்களாக மூன்று மணித்தியாலங்கள் வதப் பிரதிவாதங்கள் நிகழ்த்திய வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள். வடக்கில் மக்களால் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருக்கும் தங்கள் உரிமைகளிற்கான தன்னெழுச்சிப் போராட்டங்கள் குறித்து வாயே திறக்கவில்லை என வாகீசத்திதின் மாகாணசபைச் செய்தியாளர் அங்கிருந்து தகவல் வழங்கியுள்ளார்.

இன்று செவ்வாய்க்கிழமை காலை மாகாணசபை அமர்வு தொடங்கியவுடனேயே முதலமைச்சர் மற்றும் நாளையதினம் தண்ணீர்ப் பிரச்சினை தொடர்பில் கொண்டுவர இருந்த விசேட அமர்வுகுறித்த வாதப்பிரதிவாதங்கள் தொடங்கிவிட்டதாகவும் முதலமைச்சரும் விவசாய அமைச்சரும் இல்லாத நிலையில் விசேட அமர்வோ அது குறித்த வாதப்பிரதிவாதங்களோ தேவையற்றது என சுட்டிக்காட்டப்பட்டபோதிலும் சுமார் ஒன்றரை மணித்தியாலங்களாக தண்ணீர்ப்பிரச்சினை குறித்து உறுப்பினர்கள் சொற்போர் நிகழ்த்தியுள்ளதாக தெரியவருகின்றது.
அதன்பின்னராக கள்ளுத்தவணைகளிற்கான வருடார்ந்த அனுமதிப் பத்திரம் குறித்து மாகாணசபை உறுப்பினர் கொண்டுவந்த பிரேரணை குறித்து சுமார் ஒன்றரை மணித்தியாலங்ககள் சொற்போர் நிகழ்த்திக் களைத்துப்போன உறுப்பினர்கள் மக்கள் போராட்டங்கள் குறித்து வாய்திறக்காது வேறு சில பிரேரணைகளோடு இன்றைய சபை நடவடிக்கைகளை முடிவிற்குக் கொண்டுவந்துள்ளனர்.

கேப்பாப்பிலவில் 22 ஆவது நாளாகவும் மற்றும் புதுக்குடியிருப்பிலும் பரவிப் பாஞ்சானிலும் தங்கள் நிலங்களை விடுவிக்குமாறு மக்கள் தொடர் போராட்டங்களை நடாத்திவரும் நிலையில் நேற்றையதினம் முதல் காணாமல் செய்யப்பட்ட தங்கள் உறவுகளின் நிலைகுறித்தறிய கிளிநொச்சியிலும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றனர்.
இவை குறித்து வடக்கு மாகாணசபையில் எந்தவொரு உறுப்பினரும் வாய்திற்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை எங்களால் தெரிவு செய்யப்பட்டுள்ள தமிழ் மக்களின் பிரதிநிதிகள் எங்களின் காணி பிரச்சினைக்கு அரசுக்கு போதிய அழுத்தம் கொடுக்காமையே இந்த போராட்டங்கள் தொடர்ச்சியாக நீண்டு செல்வதற்கு காரணமாக அமைந்துள்ளது என பரவிப்பாஞ்சானில் படையினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு வலிறுயுத்தி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ள மக்கள் ஊடகங்களிற்கு கருத்துத் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com