கல்வி அமைச்சர் மீது நடவடிக்கை – சட்டமா அதிபர் திணைக்களம் செல்கிறார் ஆளுநர்

அண்மையில் பாடசாலை நிகழ்வொன்றில் இலங்கையின் தேசியக் கொடியை ஏற்றுவதற்கு கல்வி அமைச்சர் சர்வேஸ்வரன் மறுத்திருந்தார். இந்நிலையில் இலங்கையின் யாப்பு விதிகளுக்கு அமைவாக கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்வதற்கு சட்டமா அதிபர் திணைக்களத்திற்கு நாளை செவ்வாய்க்கிழமை செல்லவுள்ளதாக வட மாகாண ஆளுநர் றெயினோல் குரே தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் திணைக்களம் சென்று விசேட சந்திப்பினை மேற்கொள்ளவுள்ளதாகவும் இதன்போது ஆளுநர் என்ற வகையில் தன்னால் எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் ஆராயப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

பத்திரமுல்லையில் அமைந்துள்ள ஆளுநர் அலுவலகத்தில் இன்று காலை 10 மணியளவில் ஊடகவியலாளர்கள் மத்தியில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அங்கு மேலும் குறிப்பிட்ட அவர்,
“எனது தனிப்பட்ட கருத்துக்களை இங்கே கூற விரும்பவில்லை, ஏனெனில் இதனால் ஏற்படும் பின்விளைவுகளை நான் யோசிக்க கடமைப்பட்டுள்ளேன். நான் எந்த முடிவினை எடுத்தாலும் அதற்கான பின் விளைவுகள் நிச்சயமாக இருக்கும். அப்படிப்பட்ட விளைவுகளை நான் யோசிக்க வேண்டியிருக்கின்றது” – என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com