கல்வித் தகுதியிருந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள் – இரா.சம்பந்தன்

SAMSUNG CAMERA PICTURES

வேலைவாய்ப்பு உள்ளிட்ட விடையங்களில் தகுதியிருந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவதாக பாராளுமன்றத்தில் முறையிட்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் அரசோடு ஒட்டிக்கொண்டு முஸ்லீம் தலைவர்கள் முஸ்லிம்களுக்கும், சிங்களத் தலைவர்கள் சிங்களவர்களுக்கும் வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுக்கின்றனர் ஆனால் தகுதியுடைய தமிழர்களுக்கு அரசாங்க உத்தியோகங்களை பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாக குற்றச்சாட்டியுள்ளார்.
அத்துடன், அதிகாரத்திலுள்ள குறைந்தளவான தமிழர்களே சில தமிழ் மக்களுக்கு வேலை வாய்ப்பினை பெற்றுக் கொடுப்பதாகவும், தகுதியான தமிழர்களுக்கு அரச பணிகளைப் பெற்றுக் கொள்ள முடியாதுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

தமிழர்களுக்கு எதிரான பாராபட்சங்கள் பற்றி இலங்கையில் நீண்டகாலமாக முறைப்பாடுள்ளது, எனினும் அதில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை எனவும் சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com