கல்விக்காக 9000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது – கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்

வரவு செலவுத் திட்டத்தில் கல்விக்காக 9000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 

கல்வி அமைச்சில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

அத்துடன் பாடசாலை மாணவர்களுக்கு வவுச்சர் முறை மூலம் சீருடை வழங்கும் வேலைத் திட்டம் தொடர்பிலும் அவர் இதன்போது கருத்து வௌியிட்டார். 

இந்த வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து கல்வி வலய அலுவலகங்களுக்கு சொந்தமான பகுதிகளிலும் சீருடைகளை விற்பனை செய்யும் வர்த்தக மையங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாகவும், அங்கு வவுச்சரை வழங்குவதன் மூலம் சீருடைகளை பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார். 

அத்துடன் இந்த வேலைத் திட்டத்தின் மூலம் 800 மில்லியன் ரூபாய் வரை சேமிக்க முடியும் எனவும் அகிலவிராஜ் காரியவசம் நம்பிக்கை வௌியிட்டுள்ளார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com