கல்லையும் கலங்க வைத்த சிறுமியின் குடும்பத்திற்கு யாழ் எய்ட் ஊடாக உதவி

தந்தை ஆயுட் கைதியாக தாய் இரண்டு நாட்களிற்கு முன்னர் சுகவீனத்தால் சாவடைந்த நிலையில் தந்தையுடன் செல்வதற்காக சிறைச்சாலை வாகனத்தில் மகள் ஏறிய செய்தி எல்லோரையும் கலங்க வைத்தது.

இன் நிலையில் அவுஸ்ரேலியா வாழ் புலம் பெயர் ஈழத்தமிழர் பகீரதன் பரராஜசிங்கம் உடனடியாக யாழ் எய்ட் ஊடாக 52180 ருபாவையும் கனடா வாழ் சிவானந்த ராஜா பிள்ளைகளின் கற்றல் காலம் முழுமையும் மாதாந்தம் 5000 ருபாவையும் வழங்க ஆரம்பித்தும், மற்றும் இலண்டன் வாழ் குருபரன் (குரு) கற்றலுக்கான உதவிப் பொருட்கள் மற்றும் சிறுவர்களை அந் நிலையில் இருந்து மீட்டு எடுப்பதற்காக சிறுவர்களுக்கான தின் பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்களையும் வழங்கி உதவியுள்ளதுடன் யாழ் எய்ட்டும் சிறையில் உள்ளவரை விடுவிப்பதந்கான முழுமையான முயற்சியிலும் இறங்கி உள்ளது.

சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடிய போது, அவர்கள் சட்டத்தரணிகள் பலர் ஒன்றினைந்து ஜனாதிபதிக்கு கருனை மனு அனுப்புவதற்காக கையெழுத்து பெறும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளனர் .

இதே வேளை சிறையில் உள்ளவரின் தாயாரும் மேன்முறையீட்டுக்காக விண்ணப்பித்து உள்ளார்.அடுத்த மாதமளவில் வழக்கு எடுக்கபட உள்ளது. எனவே வழக்கிற்கான செலவினத்தை பகுதியளவில் ஏற்பதுடன் அடுத்த வாரம் அளவில் பிள்ளைகளை கொழும்பிற்கு அழைத்துச் சென்று தந்தையை பார்ப்பதற்கான வாகன வசதியையும் ஏனைய ஏற்பாடுகளை செய்து கொடுக்கவும் முன்வந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com