கல்லில் செதுக்கிய புத்தர்சிலை நயினாதீவு விகாரையில் திரைநீக்கம்

நயினாதீவு நாகதீப புராண ரஜமகா விகாரையில் கல்லில் செதுக்கப்பட்ட புத்தர் சிலை பாதுகாப்பு செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சியினால் நேற்றுமுன்தினம் திரைநீக்கம் செய்துவைக்கப்பட்டது.
குறித்த புத்தர் சிலையானது, நாகதீப புராண ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் வடமாகாணத்தின் பிரதம மகா சங்க நாயக்க தேரருமான வணக்கத்துக்குரிய பிரவீனச்சரிய தர்ம கீர்த்தி சிறி நவடகள படுமகித்தி திஸ்ஸ தேரர் மற்றும் கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜேகுனரத்ன ஆகியோரின் மேற்பார்வையின் கீழ் செதுக்கப்பட்டதாகும் .

இப்புத்தர் சிலையினை ‘முச்சலிண்ட நாக ராஜா’ விற்கு பாதுகாப்பு வழங்கும் நோக்கில் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் கமாண்டர் டி எம் எஸ் ஜெயவர்தனவினால் செதுக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் மகா சங்க நாயக்க தேரர்கள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் உள்ளிட்ட பெரும் எண்ணிக்கையிலான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com