கலாநிதி பாலசுப்பிரமணியம் தனபாலனுக்கு ”இரத்தின தீப“ விருது!

வவுனியா மாவட்டத்தில் பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (21) வடக்கு ஊடக கல்வி கல்லூரியின் நிறுவனர் அ. நபீஸ் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் நடைபெற்றது.

இதில் ‘இரத்தின தீப விருது” யாழ்ப்பாணம் கல்வியற்கல்லூரி உப பீடாபதிபதியும் சிரேஸ்ர விரிவுரையாளர் கலாநிதி பாலசுப்பிரமணியம்  தனபாலனுக்கு வழங்கப்பட்டது.

ஊடகத்துறையில் அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களான பொ.மாணிக்கவாசகம், ந.கபில்நாத், சு.வரதகுமார், கே.வசந்தரூபன், எம்.ஜி.ரட்ணகாந்தன், எஸ்.கஜேந்திரகுமார் மற்றும் சிங்கள ஊடகங்களில் கடமையாற்றும் நான்கு ஊடகவியலாளர்கள் உட்பட 10 ஊடகவியலாளர்களுக்கும், சமூக சேவைகள் மற்றும் கல்வித்துறைகளில் பணியாற்றியவர்களுமாக 44 பேருக்கு இரத்தின தீப விருதுகள் வழங்கப்பட்டன.

மலையக கலைகலாசார சங்கம் வழங்கிவரும் சமூக சேவையாளருக்கான இரத்தின தீப தேசிய சமூக விருதுகள் ‘வடக்கு ஊடக கல்வி கல்லூரியின்’ ஏற்பாட்டில் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் கலந்துகொண்டு இரத்தின தீப விருதுகளை வழங்கி வைத்தார். நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.கே.மஸ்தான் கலந்து கொண்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com