கர்ப்பிணிப் பெண் கொலை வழக்கு – சி.சி.ரி.வி ஆதாரம் சமர்ப்பிக்கப்படவில்லை !

ஊர்காவற்றுறை – சுருவில் பகுதியில் ஞானசேகரம் மேரி ரம்சிகா என்கிற கர்ப்பிணிப் பெண் கடந்த ஜனவரியில் படுகொலை செய்யப்பட்டிருந்தார். குறித்த கொலை வழக்கு இன்று ஊர்காவற்றுறை நீதிமன்றில் நீதிவான் ஏ.எம்.எம்.றியாழ் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. கொலையுண்ட பெண் சா்பில் ஆஜராகிய சட்டத்தரணி சுகாஸ் சம்வம் இடம்பெற்றபோது சந்தேகநபர்கள் மாருனார்மடத்தில் நின்றதாகக் கூறப்பட்ட ஆதரா சி.சி.ரி.வி காணொளி இன்னமும் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டினார். குறித்த கொலைவழக்கின் குற்றவாளிகள் தொடர்பில் தனக்கு தகவல் தெரியும் என முன்னர் வாக்குமூலமளித்திருந்த நெடுந்தீவு சிறுமி கொலை வழக்கின் குற்றவாளியான ஜெகதீஸ்வரன் ஊர்காவற்றுறை கர்ப்பிணிப் பெண் படுகொலைசெய்யப்பட்ட காலத்தில் பிணையில் வெளியிலேயே நின்றதாக தனக்கு தகவல் கிடைத்திருப்பதாக தெரிவித்திருந்த சட்டத்தரணி சுகாஸ் அது தொடர்பிலும் விசாரணை நடாத்தவேண்டும் என கேட்டுக்கொண்டார்.
இந்நிலையில் சந்தேக நபர்களின் விளக்கமறியல் எதிர்வரும் ஜூன் மாதம் 5 திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com