கர்நாடக வன்முறையின் அருவருப்பு – ஒருவரை நிர்வாணமாக்கி தாக்கி மண்டியிட வைக்கும் காணொளி வெளியாகியது

cauvery-row-002காவிரி நீரை தமிழகத்திற்கு திறந்துவிவேண்டும் என்ற உச்ச நீதிமன்ற தீர்ப்பையடுத்து கர்நாடகத்தில் உருவாகியுள்ள வன்முறையின் உச்சக்கட்டமாக தமிழ்நாட்டு லொறி ஒன்றின் சாரதி ஒருவரை நிர்வாணமாக்கி அவரைத் தாக்குகின்ற காணொளி ஊடகங்களில் வெளியாகிய நிலையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத்தின் முன்னால் வைத்து சிலர் அவரது ஆடைகளைக் களைவதும் ஏனையவர்கள் அவரைத் தாக்கி மண்டியிடவைப்பதும் ஒருசிலர் அவற்றை வீடியோ பதிவு செய்வதும் என குறித்த காணொளி வெளியாகியுள்ளமை இந்தியாவின் ஜனநாயகத்தை கேலிக்குள்ளாக்கியிருக்கிறது.

இன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் ஆரம்பமாகியுள்ள நிலையில் இந்தக் காணொளி வெளியாகியமை மனித உரிமை ஆர்வலர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

சணல் 4 வெளியிட்ட இலங்கையில் நிகழ்ந்தாகக் கூறப்படும் இறுதி யுத்தம் குறித்த காணாலிகளிற்கும் கர்நாடகர்களின் இந்த வன்முறைக் காணொளிக்கும் பெரிதாக வேறுபாடுகள் இருந்திருக்கவிலை என்று இது அருவருப்பானதாக இருக்கிறது என்றும் மனித உரிமைகள் ஆர்வலர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds