கருத்து வௌியிட்ட பின் அடுத்த நாள் பத்திரிகையை பார்க்கும் வரை பயமாகவே இருக்கும்!

சிலவேளைகளில் தான் கருத்தொன்றைக் கூறும்போது, அடுத்து வௌிவரும் பத்திரிகைகளை பார்க்கும் வரை பயம் ஏற்படுவதாக, பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார். 

சிலவேளை தான் கூறியவற்றுக்கு மாறாக பிறிதொரு கதையே பத்திரிகைகளில் வௌிவருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

கொழும்பு ஊடக நிறுவனம் ஒன்று ஏற்பாடு செய்திருந்த “தெலி பிகியென் கிரி கேம – 02 நவீன ஊடகவியலாளர்களுக்கான சவால்” நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். 

ஊடகவியலாளர்களுக்கு பயிற்சியளிக்க பயிற்சி நிலையங்களை நிறுவவேண்டியது அவசியம் என இங்கு கருத்துரைத்துள்ள அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இதற்காக சீன அரசாங்கத்திடம் உதவி கோரியுள்ளதாகவும் குறிப்பிட்டார். 

இதற்காக அவர்கள் விருப்பம் தெரிவித்துள்ளதாகவும், பிரதமர் அடுத்ததாக சீனாவுக்கு செல்லவுள்ளதாகவும், இதன்போது இந்த விடயம் குறித்தும் அவதானம் செலுத்துமாறு தான் வேண்டுகோள் விடுக்கவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds