கருத்து சொல்ல என்னிடம் ஒரு எலும்பு உள்ளது – சுப்பிரமணிய சுவாமி கருத்திற்கு கமல் பதிலடி –

கருத்து சொல்ல என்னிடம் ஒரு எலும்பு உள்ளது; அதுவே போதுமானது என நடிகர் கமல்ஹாசன் சுப்பிரமணிய சாமிக்கு பதிலடி கொடுத்துள்ளார். தற்போதைய அரசியல் சூழல் குறித்து கமல்ஹாசன் பரபரப்பு கருத்துகளை தெரிவித்தும் பேட்டி அளித்தும் வருகிறார். ‘தமிழகத்தில் மக்கள் கோபமாக இருக்கிறார்கள். மறு தேர்தல் நடத்த வேண்டும், அதுதான் இப்போது ஒரே வழி’ என அவர் கருத்து தெரிவித்தார். இந்நிலையில், ‘கமல்ஹாஸன் என்ற முதுகெலும்பில்லாத கோழையை சுயதம்பட்ட முட்டாளை கடுமையாக எதிர்க்கிறேன்’ என சுப்பிரமணிய சாமி கூறியிருந்தார்.

இதற்கு கமல்ஹாசன் நேற்றிரவு டிவிட்டரில் பதிலடி கொடுத்து கூறியிருப்பதாவது: என்னிடம் கருத்து சொல்வதற்கான ஒரு எலும்பு உள்ளது. அதுவே போதுமானது. தமிழ் பொறுக்கிகள் என அவர் சொல்வதற்கும் இதுவே போதுமானது. நல்லவேளை என்னிடம் 2 எலும்பு இல்லை அவரை எதிர்க்க, அதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள். எனவே இதற்கெல்லாம் நான் முரட்டுத்தனமாக பதில் சொல்ல வேண்டியதில்லை. அவரது அனுபவம் அரசியல் பரிமாற்றங்களில் என்னை தாண்டியதாக உள்ளது. அவரது உணவில் எலும்பு இல்லாததுபோல் அவர் இருக்கலாம். நான் அப்படி இல்லை. இவ்வாறு கமல்ஹாசன் ஆவேசமாக கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com