சற்று முன்
Home / இந்தியா / கருணாநிதியை நேரில் சந்தித்தேன்; நலமாக இருக்கிறார்: ராகுல்

கருணாநிதியை நேரில் சந்தித்தேன்; நலமாக இருக்கிறார்: ராகுல்

திமுக தலைவர் கருணாநிதியை தாம் நேரில் சந்தித்ததாகவும் அவர் நலமுடன் இருப்பதாகவும் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.

திமுக தலைவர் கருணாநிதிக்கு சளித் தொந்தரவு காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் சென்னை ஆழ்வார்பேட்டை யில் உள்ள காவேரி மருத்துமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். தொண்டை, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள அவருக்கு டிரக்யாஸ்டமி கருவி மூலம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் கருணாநிதியை நேரில் பார்த்து நலன் விசாரிப்பதற்காக ராகுல் காந்தி இன்று (சனிக்கிழமை) சென்னை வந்தார்.

சென்னை விமானநிலையத்திலிருந்து அவர் காரில் காவேரி மருத்துவமனைக்கு வந்தார். அவருடன் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்டோர் இருந்தனர்.

திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்துவிட்டு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த ராகுல் காந்தி, “திமுக தலைவர் கருணாநிதியை நேரில் சந்தித்து உடல் நலன் விசாரித்தேன். அவர் நலமாக இருக்கிறார்.

அவர் உடல்நிலை சீராக உள்ளதாக மருத்துவர்கள் கூறினர். அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிவித்தனர். இது ஒரு நல்ல விஷயம்.

கருணாநிதி விரைவில் குணம்பெற வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வாழ்த்து தெரிவித்தார். கருணாநிதி தமிழகத்தின், தமிழக மக்களின் தலைவர். அவர் விரைவில் நலம்பெற்று வீடு திரும்புவார்” என்றார்.

செய்தியாளர்கள் சந்திப்பின்போது திமுக பொருளாளரும் தமிழக எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினும் இருந்தார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

விவசாயிகளிடம் கீரி சம்பாவை 80 ரூபாவிற்கு வாங்கி 165 ரூபாவிற்கு விற்கிறோம்

அரிசிக்கான அதிக பட்ச சில்லரை விலை நீக்கப்பட்டதை தொடர்ந்து மூன்று வகை அரிசிகளுக்கான விலையினை பாரிய ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com