சற்று முன்
Home / இந்தியா / கருணாநிதியைப் பார்க்கச் சென்ற வைகோ மீது தாக்குதல் முயற்சி – ஸ்டாலின் கண்டனம்

கருணாநிதியைப் பார்க்கச் சென்ற வைகோ மீது தாக்குதல் முயற்சி – ஸ்டாலின் கண்டனம்

காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உடல்நலம் குறித்து விசாரிப்பதற்காக மருத்துவமனைக்கு சென்ற ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவுக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தி.மு.க.வினர் அவரது வாகனம் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.

அவரது கார் மீது செருப்பு வீசப்பட்டது. கற்களையும் மரக்கட்டைகளையும்கூட அவரது வாகனங்களின் மீது தி.மு.க. தொண்டர்கள் வீசினர்.

கருணாநிதிக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென ஏற்பட்ட மூச்சுத் திணறல் காரணமாக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு ‘டிரக்யாஸ்டமி’ சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்நிலையில், தி.மு.க.வையும் அக்கட்சியின் தலைவர்களையும் கடுமையாக விமர்சித்து வரும்; வைகோ, இன்றையதினம் காவேரி மருத்துவமனைக்கு சென்றவேளை தி.மு.க.வினர் காரை மறித்து எதிர்ப்பு கோஷமிட்டதுடன் அவரது காரை மருத்துவமனைக்கு செல்லமுடியாதபடி கற்கள் மற்றும் செருப்புக்களை வீசி தாக்கியுள்ளனர். இதனால் கருணாநிதியை பார்க்காமலேயே வைகோ திரும்பிச் சென்றதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்த விஷயம் குறித்து, திமுக பொருளாலர் ஸ்டாலின், ” தலைவர் கலைஞர் அவர்களின் உடல் நலம் விசாரிக்க வந்த மதிமுக பொது செயலாளர் திரு வைகோ அவர்களை தடுத்து நிறுத்தியதை நான் கண்டிக்கிறேன். மருத்துவமனையில் நான் இல்லாத நேரத்தில் வைகோ அவர்களுக்கு நேர்ந்த இந்த விரும்பத்தகாத சம்பவத்திற்கு வருத்தம் தெரிவித்து கொள்கிறேன், திமுகவிற்கு எதிரான பிரச்சாரங்களில் யார் ஈடுபட்டு வந்தாலும் கழக தோழர்கள் அவர்களுக்கு எதிராக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது தலைவர் கலைஞர் அவர்களுக்கோ, எனக்கோ எக்காலத்திலும் உடன்பாடானது அல்ல.  கழகத்திற்கு எதிரான பிரச்சாரங்களை அரசியல் ரீதியாக ஜனநாயக முறையில் எதிர்கொள்ளும் சக்தி மிக்க தொண்டர்கள் நிறைந்த இந்த இயக்கத்தில் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை கழக தோழர்கள் தவிர்த்து அமைதி காக்குமாறு கண்டிப்புடன்  கேட்டு கொள்கிறேன் ” என்றார்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

ஆரியகுளத்தில் மத அடையாளங்களுக்கு இடமில்லை !

யாழ் மாநகர சபைக்கு சொந்தமான ஆரியகுளத்தில் எந்த விதமான மத அடையாளங்களையும் அமைக்க அனுமதிக்க முடியாது ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com