சற்று முன்
Home / செய்திகள் / கன்னியாயில் தென்கையிலை ஆதீனம் சுவாமி மீது தேனீர் ஊற்றியதால் பதற்றம்

கன்னியாயில் தென்கையிலை ஆதீனம் சுவாமி மீது தேனீர் ஊற்றியதால் பதற்றம்

கன்னியாயில் தமிழரின் அடையாளத்தை பாதுகாக்கும் மக்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்த தென்கயிலை ஆதீனம் சுவாமி மீது காடையர் ஒருவர் தேநீரால் ஊற்றியதால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை கன்னியா வென்னீரூற்று பகுதியில் பிள்ளையாா் ஆலயம் இருந்த இடத்தில் பௌத்த விகாரை கட்டப்படுவதை எதிா்த்து இன்று வடகிழக்கிலிருந்தும் கிழக்கின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பெருமளவு மக்கள் குறிப்பாக இளைஞா்கள் கன்னியாய் சென்றுள்ள நிலையில் பொலிஸாா், இராணுவம் குவிக்கப்பட்டு அங்கு பதற்றமான சூழல் நிலவுகிறது.

பெருமளவான இளைஞர்கள் கன்னியாய்ப் பகுதியில் குவிந்துள்ளதால் தடுப்பரண்களை அமைத்து தடைகளைப் போட்டு பொலிசார் இளைஞர்கள் முன்னேறிச் செல்லமுடியாதவாறு தடுத்தாவாறுள்ளனர். பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதிக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவித்தன.

இந்நிலையில் தென்கைலை ஆதீன குருமுதல்வர் அகத்தியர் மற்றும் கோவில் அம்மா பொலிஸ் பாதுகாப்புடன் உள்ளே அழைத்துச் செல்லப்பட்டனர் ஆனால் கோவில் வாசலில் கூடிருந்த பிக்கு மற்றும் காடையர்களால் தேனீர் ஊற்றிக் கலைக்கப்பட்டுள்ளனர். ஏனையவர்கள் கன்னியா சந்தியிலேயே வழிமறிக்கப்பட்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com