சற்று முன்
Home / செய்திகள் / கனடியப் பிரதமரி மனைவிக்கு கொறோனா – உறுதிப்படுத்தியது பிரதமர் அலுவலகம்

கனடியப் பிரதமரி மனைவிக்கு கொறோனா – உறுதிப்படுத்தியது பிரதமர் அலுவலகம்

கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் மனைவி சோஃபி கிரேகோயர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

சோஃபியிடம் நடத்தப்பட்ட பரிசோதனைகள் மூலம் அது உறுதி செய்யப்பட்டதாக கனடியப் பிரதமர் அலுவலகம் தெரிவித்தது.

ட்ரூடோவிடம் தற்போது கிருமித்தொற்று அறிகுறி ஏதும் தென்படவில்லை, என்றபோதும் அவர் 14 நாட்களுக்குத் தனிமைப்படுத்தப்படுவார்.

லண்டனில் உரையாற்றி விட்டுக் கனடா திரும்பிய சோஃபிக்குச் சளிக்கான அறிகுறி இருந்தது.

உடனே மருத்துவரை நாடிய அவர், வீட்டிலேயே தம்மைத் தனிமைப்படுத்திக்கொண்டதாகச் சொன்னார்.

அத்துடன், மாநிலத் தலைவர்களை நேரில் சந்திப்பதற்குப் பதிலாக தொலைபேசி மூலம் அவர்களுடன் ட்ரூடோ கலந்துரையாடுவார்.

கனடாவில் நூற்றுக்கும் அதிகமானோர் COVID-19 கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கனடாவின் பத்து மாநிலங்களில் ஆறில் கிருமிப் பரவல் உறுதி செய்யப்பட்டுள்ளது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com