கனகராஜன்குளத்தில் மோட்டார் குண்டுகள் மீட்பு

வவுனியா வடக்கு கனகராஜன்குளம் பகுதியில் காட்டிற்குள் இருந்து வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டுகள் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன. கனகராஜன்குளம் – மன்னகுளம் பகுதியிலுள்ள காட்டுப்பகுதிக்கு விறகு வெட்டுவதற்காக சென்றவர்கள் இன்று காலை வெடிக்காத நிலையிலிருந்த 4 மோட்டார் குண்டுகளை அவதானித்துள்ளனர். இதையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளனர். சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் அப்பகுதியில் தேடுதல் மேற்கொண்டுள்ளனர்.தேடுதலில் பின்னர் அப்பகுதியில் மோட்டார் குண்டுகள் அதிகம் இருப்பதாகவும் நீதிமன்றத்தின் அனுமதியைப் பெற்று அகழ்வு பணியை மேற்கொள்ளவிருப்பதாகவும் கூறியுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com