கனகம்புளியடிச் சந்தி உணவகத்தில் வாள் வெட்டு மூவர் படுகாயம்

சாவகச்சேரி சரசாலை கனகம்புளியடிச் சந்தியில் அமைந்துள்ள உணவு விடுதியினுள் இடம்பெற்ற வாள்வெட்டுச் சம்பவத்தில் உணவக உரிமையாளர் உட்பட மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

இச் சம்பபவம் பிற்பகல் 4:15 மணியளவில் மூன்று மோட்டார் சைக்கிளில் வருகைதந்த ஆறு இளைஞர்கள் உணவகத்துக்குள் உட்புகுந்து இளைஞர்கள் மீது சரமாரியாக தாக்கினர்.

சம்பவத்தில் உணவகத்தின் உரிமையாளரான 32 வயதுடைய சிவபாலன் சிவலக்ஷ்மன், ஆட்டோச் சாரதியான 24 வயதுடைய நாகசாமி நந்தன், வெளிநாடொன்றிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன்னர் நாடு திரும்பிய 22 வயதுடைய வேணுகோபால் சுகந்தன் ஆகியோரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஒருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com