கனகபுரம் துயிலுமில்ல பொது நினைவுச் சமாதி கட்டுமானத்திற்கு எதிரான வழக்கு ஜனவரி 20 வரை ஒத்திவைப்பு

நேற்றைய தினம் வியாழன் கிளிநொச்சி கனகபுரம் மாவீரா் துயிலுமில்லத்தில் பொது நினைவுச் சமாதி ஒன்றை அமைக்கும் பணியில் மாவீரா்களின் உறவினா்கள் மற்றும் முன்னாள் போராளிகள் ஈடுப்பட்டிருந்தனா்.

இதன்போது கரைச்சி பிரதேச சபை செயலாளா் க.கம்சநாதன் சம்பவ இடத்திற்குச் சென்று பொதுச் சமாதி அமைக்கும் நிறுத்துமாறு கோரியிருந்தாா் ஆனால் ஏற்பாட்டாளா்கள் மறுத்துவிட., சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி உதவி பொலீஸ் அத்தியட்சா் றொசான் ராஜபக்ஸ் தலைமையில் பொலீஸாா் ஏற்பாட்டாள்களுடன் சமரசமாக பேசி வியாழன் மாலை கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு அழைத்து வாக்குமூலங்களை பதிவு செய்த பின்னா் இன்று வெள்ளிக்கிழமை காலை கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்கு சமூகமளிக்குமாறு கூறியிருந்தனா்.

அதனடிப்டையில் இன்று காலை கிளிநொச்சி நீதவான் நீதி மன்று துயிலுமில்லத்தில் பொதுச் சமாதி அமைக்கும் பணியில் ஈடுப்பட்ட சந்தேக நபா்கள் ஜவா் முன்னிலையாகிருந்தனா் இவா்கள் சாா்பாக மூன்று சட்டத்தரணிகளும் முன்னிலையாகியிருந்தனா்.

கரைச்சி பிரதேச சபையின் செயலாளரின்முறைபாட்டையடுத்து கிளிநொச்சி பொலீஸாா் இவா்கள் மீது சட்டவிரோதமாக காணிக்குள் உள்நுழைந்து கட்டுமானப் பணிகளில் ஈடுப்பட்டனா் என்றே வழக்கு பதிவுசெய்திருந்தனா். அத்தோடு கனகபுரம் மாவீரா் துயிலுமில்லம் அமைந்துள்ள காணிக்குள் எவரும் உட் பிரவேசிக்காமல் இருப்பதற்கு நீதிமன்றத்திடம் தடை உத்தரவு ஒன்றை பெற்றுக்கொள்ள பொலீஸாா் கோரிய போது அதனை நிராகரித்த கிளிநொச்சி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆனந்தராஜா குற்றவியல் வழக்கான 433 மற்றும் 490 கீழ் வழக்கு பதிவு செய்துள்ள வழக்கொன்றிற்கு இவ்வாறான தடையுத்தரவு வழங்க முடியாது என தெரிவித்துவிட்டாா்

அத்தோடு நீதி மன்றம் பொதுச் சமாதி அமைக்கும் பணிகளில் ஈடுபட்ட ஜந்து பேரையும் தலா 50 ஆயிரம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்ததோடு, வழக்கை எதிர்வரும் மாதம் 20 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com