கதை விடும் பசுபதிப்பிள்ளை


நகைச்சுவை கலந்த தத்துவப் பாடல்களினூடாகவும் நீதிக் கதைகள் ஊடாகவும் பிறரைத் தாக்குவதில் கைதேர்ந்தவர் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வடக்கு மாகாணசபை உறுப்பினர் பசுபதிப்பிள்ளை. அவர் இன்றைய அமர்வில் எழுந்து தான் ஒரு கதை சொல்லப் போவதாக கூறினார். சிரிப்பொலியின் பின் சபையும் அனுமதித்தது. அவர் கூறிய கதை இதுதான்,
முக்காலமும் அறிந்த முரிவரிடம் கையினுள் புறா ஒன்றனைக் கொண்டு ஒருவன் சென்றுள்ளான். முனிவரே நீங்கள் முக்காலமும் அறிந்தவர். நான் கையினுள் பொத்தி வைத்திருக்கும் புறா உயிரோடு உள்ளதா? இல்லாவிடில் இறந்து விட்டதா எனக் கேட்டான்? புறா உயிருடனிருப்பதை அவதானித்த முனிவர் அவனது கை கட்டைவிரல் புறாவின் தலையை அழுத்திக்கொண்டிருப்பதையும் அவதானித்தார். புறா உயிருடன் உள்ளது எனக் கூறினால் உயிருடன் இருக்கும் புறாவை அவன் கைவிரலால் அழுத்தி கொன்றுவிடுவான். புறா இறந்துவிட்து எனக் கூறினால் உயிருடன் உள்ள புறாவை பறக்கவிட்டுவிடுவான் என யோசித்த முனிவர் எல்லாம் உன் கையில் தான் உள்ளது என்று முனிவர் கூறினார். என்றார் பசுபதிப்பிள்ளை.
பசுபதிப்பிள்ளை சென்ன கதையைக் கேட்டு உணர்ச்சிவசப்பட்ட சயந்தன் எழுந்து நல்ல கதை சொன்ன நந்தவனத்து ஆண்டிக்கு நன்றி என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com