சற்று முன்
Home / செய்திகள் / கண்டுகொள்ளப்படாத நீதி !!! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று ஒருவருடம் !!

கண்டுகொள்ளப்படாத நீதி !!! காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் போராட்டம் இன்று ஒருவருடம் !!

காணாமல் போன தமது உறவுகளை மீளக் கையளிக்குமாறும் அவர்களைப் பற்றிய உண்மை நிலையை வெளிப்படுத்துமாறும் கோரி, கிளிநொச்சியில் மாபெரும் அமைதிப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக அமைதியான முறையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்புப் போராட்டம் இன்றுடன் ஒரு வருடத்தை எட்டியுள்ளது. அதனை நினைவுறுத்தும் வகையில் இன்றைய போராட்டம் முன்னெடுக்கப்பட்டது

இப்போராட்டத்தில் கலந்துகொண்ட காணாமல் போனோரின் உறவினர்கள், ‘சர்வதேசமே, உள்நாட்டு பொறிமுறையில் எமக்கு நம்பிக்கை இல்லை’, காணாமல் போனோர் அலுவலகம் சர்வதேசத்திற்கு கண்துடைப்பு’, ‘குற்றங்களை மறைக்க சட்டங்களில் திருத்தமா?’, ‘சர்வதேசமே ரகசிய முகாம்களில் உள்ள எமது உறவுகளைத் தா’, ஐ.நா.வே! பன்னாட்டு தலையீட்டுடனான விசாரணை பொறிமுறையே தேவை’, ஐ.நா.வே! எங்கள் பிள்ளைகளுடன் நாங்கள் வாழும் உரிமையை எங்களுக்கு உறுதிசெய்’ போன்ற வாசகங்களை தாங்கிய பதாதைகளுடன் தமது உணர்வுகளையும் கோரிக்கைகளையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இப்போராட்டத்தில், ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் ஆனந்தசங்கரி, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு மாகாண கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன், மாகாண சபை உறுப்பினர்களான சு.பசுபதிப்பிள்ளை, த.குருகுலராஜா, ஜனநாயக மக்கள் முன்னணியின் உறுப்பினர் பாஸ்கரா, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பின் செயற்பாட்டாளர் அருட்தந்தை சக்திவேல் மற்றும் மனித உரிமை செயற்பாட்டாளர்கள், மதத் தலைவர்கள், சிவில் அமைப்புக்களைச் சேர்ந்தவர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com