கண்டி பாதயாத்திரை ரோதை யாத்திரையாக மாறிவிட்டது – வசந்த சமரசிங்க கேலி

IMG_8293நாட்டில் நடந்து முடிந்த ஜனவரி 8ம் திகதி தேர்தலில் தோல்வியை தழுவிக்கொண்ட முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மீ்ண்டும் ஆட்சியை கைப்பற்ற நடாத்தப்படும் கண்டி பாதயாத்திரை ரோதை யாத்திரையாக மாறிவிட்டது. பாத யாத்திரை என்றால் நடந்தே செல்ல வேண்டும். மஹிந்தவுக்கு வயது 70வது ஆகியதால் வாகனத்தில் யாத்திரையாக செல்கின்றாரா ? என கேள்வி எழுப்புகின்றார் வடமத்திய மாகாண சபை உறுப்பினரும், மக்கள் விடுதலை முன்னணியின் மத்திய குழு உறுப்பினருமான வசந்த சமரசிங்க.

மஸ்கெலியா கலாசார மண்டபத்தில் 29.07.2016 அன்று காலை இடம்பெற்ற கடன் சுமை, வரிச்சுமை மற்றும் வீழ்ச்சியடையும் பொருளதாரம் என்ற தொனிபொருளில் நடைபெற்ற விழிப்புணர்வு கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.IMG_8281

அவர் மேலும் இங்கு உரையாற்றுகையில்,

மக்களுக்கான சுதந்திரமான உரிமைகளை அனுபவிக்ககூடிய வகையில் அரசு ஒன்று வேண்டும் என்பதற்காகவே இந்த புதிய அரசாங்கத்தை மக்கள் வாக்களித்து தேர்வு செய்தனர்.

இருந்தும் கடந்த அரசாங்கத்தை போலவே இந்த கூட்டு ஆட்சி அரசாங்கமும் மக்களுக்கென துரோகங்களை செய்து வருகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை இரண்டாக பிளவுப்படுத்தி தனி ஆட்சி ஒன்றுக்கான விதையை போடுவதற்கு நாட்டின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சில அங்கத்தவர்களை கொண்டு முயற்சி செய்து வருகின்றார்.

இந்த வகையில் விமல் வீரவன்ச, கமன்பில போன்ற இன்னும் பலர் நாடகம் ஒன்றை அரங்கேற்றி வருவதாக தெளிவாக தெரிகின்றது. இந்நிலையில் ரணில் விக்கிரமசிங்க தனி ஆட்சி ஒன்றை அமைக்க வீரவன்ச, கம்மன்பில ஆகியோர் முக்கிய துறும்புகளாக ரணில் விக்கிரமசிங்க பாவித்து வருகின்றார்.IMG_8297

ஜனாதிபதியின் ஆலோசனைகளுக்கு பிரதமர் செவி சாய்த்து வந்தாலும், ஜனாதிபதியின் கடமைகளையே பிரதமர் மேற்கொண்டு வருகின்றார். இருந்தாலும் நிலையான தனி அரசு இல்லாமல் ஜனாதிபதியால் இயங்க முடியாது என்பதை ரணில் தெரந்து கொண்டு இவ்வாறு செயல்பட்டு வருகின்றார்.

நாட்டில் நீதியை சுதந்திரமாக செயல்படுத்த சம்மந்தப்பட்ட திணைக்களங்களுக்கு சுதந்திரத்தை வழங்காமல் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உத்தரவுகளை பிறப்பித்து வருகின்றனர். இது எந்தவகையில் நியாயமான ஒன்றாகும் என கேள்வி எழுப்புகின்றார்.

இச்செயற்பாட்டினால் குற்ற செயல்கள் அதிகரிக்கும் இடம்பெற்ற ஊழல் நடவடிக்கைகள் மூடி மறைக்கப்படும் என்பதை இவர்கள் தெளிவுப்படுத்துகின்றனர்.

அத்தோடு அரசியல் இலாபத்தை நோக்காக கொண்டு சட்டத்தை நிலைநாட்ட தடுமாறி வருகின்றார்கள். தனி அரசாங்கத்தை கைப்பற்றுவதற்காக கூட்டு ஆட்சி அரசாங்கத்தை உடைத்து பலத்தை பெறுவதற்கு முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ குறுக்கு வழியாக பாத யாத்திரையை வாகன யாத்திரையாக கொண்டு சென்றாலும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெருபான்மை பலம் பெற்று பாராளுமன்றம் கலைக்கப்பட்டால் மாத்திரமே இவர் ஆட்சியை கைப்பற் முடியும். இல்லையேல் 2020 ஓகஸ்ட் வரை இந்த அரசை கொண்டு செல்வார்கள். ஆனால் மக்களின் விசுவாசத்தை காப்பாற்ற முடியாமல் இந்த இரு கட்சிகளும் தனது சக்தியை இழந்து வரும் என அவர் மேலும் தெரிவித்தார்.

IMG_8295

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com