சற்று முன்
Home / செய்திகள் / கட்டாக்காலி நாய்கள் காப்பகத்திற்கு தடை – பின்னணியில் யாழ் மாநகர பிரதி முதல்வர்

கட்டாக்காலி நாய்கள் காப்பகத்திற்கு தடை – பின்னணியில் யாழ் மாநகர பிரதி முதல்வர்

தியாகி அறக்கொடை நிறுவனத்தினால் கட்டாக்காலி நாய்களை பராமாிப்பதற்கான காப்பகம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப் பட்ட நிலையில், யாழ்.மாநகரசபை பிரதி முதல்வா் துரைராசா ஈசன் மற்றும் காப்பகம் அமையவுள்ள சூழலில் உள்ள ஆலயம் ஆகியவற்றின் தலை யீட்டினால் காப்பம் அமைக்கும் முயற்சிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது.

யாழ்.குடாநாட்டில் கட்டாக்காலி நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகாித்துக் கொண்டிருக்கின்றது. மேலும் அதிகளவான விபத்துக்களும் நா ய்களினால் ஏற்படும் நிலையில், கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்துவது தொடா்பாக அண்மைக்காலத்தில் பல்வேறு கருத்துக்கள் எழுந்துள்ளது டன், கட்டாக்காலி நாய்களுக்கான காப்பகம் அமைப்பதற்கு பல்வேறு தரப்பினரும் முயற்சித்து வருகின்றனா்.

இந்நிலையில் தியாகி அறக்கொடை நிறுவனத்தினால் கொழும்புத்துறை பகுதியில் கட்டாக்காலிகளுக்கான காப்பகம் ஒன்றை அமைப்பதற்கு முய ற்சிக்கப்பட்டது. இந்த காப்பகம் ஊடாக கட்டாக்காலி நாய்களை பிடித்து சிகிச்சை வழங்கப்பட்ட பின் 3 நாட்கள் கொழும்புத்துறை பகுதியில் தங்க வைக்கப்பட்டு பின்னா் மீசாலையில் உள்ள நிரந்தர காப்பகத்திற்கு அனுப்பிவைக்க திட்டமிடப்பட்டிருந்தது.

இதற்காக கொழும்பு துறை பகுதியில் காணி கொள்வனவு செய்யப்பட்டதாகவும், அந்த காணியில் கட்டாக்காலி நாய்களுக்கான தற்காலிக கா ப்பகம் ஒன்றை அமைப்பதற்கான சகல அனுமதிகளும் பெறப்பட்டு நாய்களை வைத்திருப்பதற்கான வலைக்கூடுகள், கொட்டகைகள் என சகல ஒழுங்குகளும் செய்யப்பட்டிருந்த நிலையில்,

யாழ்.மாநகரசபையின் பிரதி மேயரும், கொழும்புத்துறை பகுதியில் உள்ள ஆலயம் ஒன்றும் இணைந்து காட்டிய எதிா்ப்பினால் கட்டாக்காலி நா ய்களுக்கான தற்காலிக காப்பகம் அமைக்கும் பணிகளுக்கு தடைவிதிக்கப்பட்டிருக்கின்றது. இதேவேளை குறித்த தற்காலிக காப்பகத்தில் வை த்து கட்டாக்காலி நாய்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்படும் எனவும்,

சத்திர சிகிச்சையின் பின் கழிவுகள் அந்த பகுதியில் வீசப்படும் எனவும் தற்காலிக காப்பகத்தை சூழவுள்ள சில குடும்பங்களுக்கும் ஆலய நிா்வா கத்திற்கும் தவறான தகவல் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால் அங்கு சத்திர சிகிச்சை எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது. எனவும் 3 நாட்களுக் கு கட்டாக்காலி நாய்களை வைத்திருந்து சாதாரண சிகிச்சையளிப்பது மட்டுமே, திட்டம் எனவும் காப்பகத்தினா் கூறுகின்றனா்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

குப்பை மேடாக மாறும் காரைக்கால் – சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்து அபாய எச்சரிக்கை

நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவு தரம் பிரிக்கும் நிலையத்தில் தரம்பிரிக்கப்படாது வருடக்கணக்காக கொட்டிக் குவிக்கப்பட்டுக் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com