கடும் மழை – இரணைமடு அனைத்து வான்கதவுகளும் திறப்பு (படங்கள்)

கடும் மழை பெய்துவருவதையடுத்து இரணைமடுக் குளத்தின் அனைத்து வான் கதவுகளும் திறந்து விடப்பட்டுள்ளன. இதனால் அயல் கிராமங்கள் நோக்கி வெள்ளம் பாய்ந்துகொண்டிருப்பதனால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக கிளிநொச்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தற்போது பெய்துவரும் கடும் மழை காரணமாக இரணைமடுக் குளத்திற்கு அதிகளவு நீா் வந்துகொண்டிருக்கிறது.

எனவே அதிகரித்த நீர் குளத்திற்கு வருவதனால் அனைத்து வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளன. குளத்தின் புனரமைப்பு பணிகள் இடம்பெறுவதனால் இவ்வருடம் குளத்தின் நீர் மட்டத்தினை 24 அடியாக வைத்திருப்பதற்கு தீா்மானிக்கப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தற்போது குளத்தின் நீர் மட்டம் இன்று காலை 32 அடி 6அங்குளமாக காணப்பட்டுள்ள நிலையில் அனைத்து கதவுகளும் திறக்கப்பட்டுள்ளது.

இரணைமடு குளத்தின் 11 கதவுகளில் 1 கதவு இயங்காத நிலையில் காணப்படுகின்றது. இரணைமடுக்குளத்திற்கு அதிகளவான நீர் வருவதனால் கடற்படையினரின் பொறியியல் பிரிவினரின் உதவியுடன் கதவுகள் திறந்து வைக்கப்பட்டது.

6 அடிவரை இரணைமடு கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளன.

இதேவேளை, முறிகண்டிஊடாக அக்கராயன், ஆணைவிழுந்தான், ஜெயபுரம், முழங்காவில் செல்லும் பிரதான வீதிபோக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது.

அக்கராயன் குளம் வான் பாய்வதனால் வீதியை குறுக்கெடுத்து வெள்ளம் செல்வதால் இவ்வாறு போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

இதே வேளை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பொது இடங்களில் தங்கி உள்ளதுடன்,அவர்களிற்கான உணவு உட்பட அனைத்து வசதிகளும் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவிக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com