கடவுளைக் கும்பிடுவோம் – கடுமையாக நிற்போம் !!

காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் இனி அரசுடன் கடுமையாக நிற்போம் எனத் தெரிவித்துள்ள தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர் கட்சி தலைவருமான இரா. சம்மந்தன் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் விடயம் மற்றும் மக்களின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பில் நாங்கள் எல்லோரும் கடவுளை கூம்பிடுவோம் எனவும் தெரிவித்துள்ளார்.


கிளிநொச்சிக்கு இன்று புதன் கிழமை பயணம் செய்த அவர் கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றில் 143 நாளாக தொடர் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை சந்தித்து கலந்துரையாடிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,
காணாமல் போனோர் விடயத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கின்ற போது சாதாரணமாக பேசுவதில்லை. மிகவும் கடுமையாகவே பேசுகின்றேன். என்னுடைய மக்களுக்கு முடிவுச் சொல்ல வேண்டும் என்றும் கேட்டிருக்கிறேன். கொஞ்சம் பொறுங்கோ ஒரு முடிவு தருகின்றோம் என்று சொல்லியிருக்கின்றார்கள்.

நாங்கள் எல்லோரும் கடவுளை கூம்பிடுவோம், காணாமல் போனோர் விடயம் குடியேற்றம் விடயம் மக்களின் ஏனைய பிர்சசினைகள் எல்லாம் தீரவேண்டும். யுத்தம் முடிந்த பின்னர் ராஜபக்ஸ் ஆட்சியில் எதுவும் நடைபெறவில்லை. ஆனால் தற்போது சிலர கருமங்கள் நடைபெறுவதற்கு ஆரம்பிக்கப்பட்டுள்ளது ஆனாலும் அதில் தாமதங்கள் இருக்கின்ற பல்வேறு குழப்பங்கள் இருக்கின்றன. இருந்தும் இவை எல்லாவற்றையும் நாங்கள் முன்னெடுக்க வேண்டும், எல்லாவற்றையும் வெற்றிக்கொள்ளும் வகையில் விடயங்களை கையாள வேண்டும்.

நாங்கள் இந்த கருமங்களை நிறைவேற்ற வேண்டும் என்றால் அவகாசம் கொடுக்க வேண்டிய கட்டாய தேவை இருக்கிறது அவகாசம் கொடுக்காது விட்டால் கைவிடப்பட்ட விடயமாக போய்விடும். எனவே இது சம்மந்தமாக இறுதி முடிவை மேற்கொள்வதற்கு கடும் முயற்சி எடுப்பேன். காணாமல் போனவர்கள் விடயத்தில் நாங்கள் முயற்சி எடுக்காமல் இல்லை. முயற்சி எடுக்கின்றோம் ஆனால் இது மிகவும் சிக்கலான விடயம். ஒரு சிக்கலான விடயமாக இருந்தாலும் இந்த மக்களுக்கு ஒரு முடிவு வரவேண்டியது அத்தியாவசியம் என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com