கடற்படை எம்மைத் தாக்கியது – கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் தெரிவிப்பு

யாழ்.நெடுந்தீவு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடித்து கொண்டிருந்த 10 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினால் கைது செய்யப்பட்டிருக்கும் நிலையில், கைது செய்யப்படும்போது இலங்கை கடற்படையினர் தம்மை தாக்கியதாக கைதாகியுள்ள இந்திய மீனவர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

நேற்று முன்தினம் இரவு யாழ்ப்பாணத்தை அண்டியுள்ள நெடுந்தீவு பகுதியில் இந்திய இழுவை படகுகள் கடற்றொழில் ஈடுபட்டிருந்த சமயம் இலங்கை கடற்படை அவர்களை துரத்தியுள்ளது. இதன்போது இயந்திரம் பழுதடைந்த நிலையில் தப்பிசெல்ல இயலாத நிலையில் ஒரு இழுவை படகும் அதிலிருந்த 10 இந்திய மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இந்தியா- தமிழகம் இரா மேஸ்வரம் பகுதியை சேர்ந்தவர்கள் என கூறப்படுகின்றது. இதேவேளை கைதான மீனவர்கள் நேற்றைய தினம் மாலை யாழ்.மாவட்ட கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனர். இதேவேளை தம்மை கைது செய்யும்போது இலங்கை கடற்படையினர் தம்மை தாக்கியதாக கூறும் இந்திய மீனவர்கள் கடற்படையின் தாக்குதலில் தங்களில் ஒருவர் காயமடைந்ததாகவும் கூறியிரு க்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com