கடற்படையினரால் விடுவிக்கப்பட்ட முள்ளிக்குளம் தேவாலயத்தில் மக்கள் வழிபாடு!

முள்ளிக்குளம் மக்களின் குடியிருப்பு நிலங்கள் நேற்று கடற்படையினரினால் விடுவிக்கப்பட்ட நிலையில் கிராம மக்கள் இன்று காலை தமது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்தனர்.
முள்ளிக்குளம் பங்குத்தந்தை அருட்தந்தை அன்ரன் தவராசா தலைமையில் முருங்கன் மறைக்கோட்ட முதல்வர் அருட்தந்தை மார்க்கஸ் மற்றும் அருட்தந்தை சுகீன் ஆகியோர் இணைந்து திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர். இதனைத் தொடர்ந்து முள்ளிக்குளம் மக்கள் தமது நிலங்களை பார்வையிட்டனர்
இதேவேளை கடற்படையினர் முதற்கட்டமாக 100 ஏக்கர் காணியை விடுவித்துள்ளதாக அறிவித்துள்ள நிலையில் தற்போது அடையாளம் காணப்பட்ட இடங்களுக்கு மாத்திரமே மக்களின் நடமாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முள்ளிக்குளம் மக்கள் இன்று 10 வருடங்களின் பின் மீண்டும் தமது சொந்த மண்ணில் காலடி எடுத்து வைத்துள்ள நிலையில் மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை, அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள் ஆகியோரும் மக்களுடன் கலந்து கொண்டிருந்தனர்
மேலும், பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சார்ள்ஸ் நிர்மலநாதன், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜீ.குணசீலன், எஸ்.பிரிமூஸ் சிறாய்வா, பா.டெனீஸ்வரன், மன்னார் மறைமாவட்ட கத்தோலிக்க ஒன்றியத்தின் செயலாளர் கெனடி ஆகியோர் குறித்த மக்களுடன் கலந்துரையாடினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com