கடமை நேரத்தில் கிராம உத்தியோகத்தர்கள் அலுவலகத்தில் இல்லை – ஆய்வில் அதிர்ச்சி – மக்கள் அவதி – தீர்வு கிடைக்குமா ?

யாழ் மாவட்டத்தில் பல கிராம சேவகர் அலுவலங்களில்  சனிக்கிழமைகளில் பகல் வேளையிலும் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நண்பகலுக்குப் பின்னருமாக  கிராமசேவகர்களைக் காணமுடிவதில்லை என கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றிலிருந்து  தெரியவந்துள்ளது.

திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் முழு நேரமும் (8.30 முதல் 4.15 வரை) சனிக்கிழமைகளில் நண்பகல் 12.30 மணிவரை கிராமசேவகர்கள் கட்டாயம் அலுவலங்களில் இருக்கவேண்டும் குறிப்பிட்ட நாட்கள் அவர்களிற்கான வெளிக்கள நாட்கள் அல்ல அவை அலுவலகத்தில் கிராமசேவையாளர்கள் தங்கிநின்று மக்கள் பணி ஆற்றும் நாட்கள் என 09.06.2016 ஆம் நாள் திகதியிட்ட சுற்றுநிருபம் ஒன்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சினால் அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. இந் நடைமுறையானது கடந்த வருடம் சித்திரை மாதத்திலிருந்தே அமுலில் இருப்பதாக தொியவருகின்றது. இவ் உத்தரவினை மீறி கிரமசேவையாளர்களை குறித்த தினங்களில் வெளிக்கள வேலைக்கு பணிக்க அனுப்புவது உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சுற்றுநிருப உத்தரவை மீறும் செயல் எனவும் தெரியவருகின்றது.

எனினும் கிராம சேவகர்கள் வெளிக்கள வேலை எனக்கூறி குறிப்பிட்ட நாட்களிளிலும் அலுவலகத்தில் நிற்பதில்லை என வாகீசத்திற்குக் கிடைத்த தகவல்களின் அடிப்படையில் யாழ் மாவட்டத்திலுள்ள 15 பிரதேச செயலக பிரிவுகளின் கீழ் உள்ள பல கிராம சேவகர் பிரிவுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுஒன்றின்படி சனிக்கிழமைகளில் 80 வீதமான கிராமசேவகர்கள் நண்பகல் 12.30 மணிவரை அலுவலகங்களில் நிற்பதில்லை என்றும் ஏனைய அலுவகப் பணி நாட்களான திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் பிற்பகல் வேளைகளில் குறிப்பாக 01.30 மணிக்குப்பின்னராக அலுவலகங்களில் நிற்பதில்லை என்றும் தெரியவந்துள்ளது.

இதனால் தம் தங்கள் பணிகளை முடிக்கமுடியாதுள்ளதாகவும்  கடமைகளை முடிக்க பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக மக்கள்  தெரிவித்துள்ளனர். ஏற்கனவே வடக்கில் கிராமசேவையாளர்கள் பற்றாக்குறை நிலவுவதாகக் குறிப்பிடப்பட்டுவந்துள்ளநிலையில் அது தொடர்பில் சில மாதங்களிற்கு முன்னர் அரசினால் போட்டிப் பரீட்சைகள் நடத்தப்பட்டுள்ளபோதிலும் புதிய கிராம சேவையாளர்கள் நியமனம் தொடர்பில் தொடர்ந்தும் இழுபறி நிலையே காணப்படுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். இவ்விடையத்தில் அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு மக்கள் எதிர்நோக்கும் சிரமங்களிற்கு உரிய தீர்வினைப் பெற்றுக்கொடுக்கவேண்டும் அரசாங்கத்திடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதேவேளை 2 ஆயிரத்து 69 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 200 பேர் வாழும் கிராமமான புன்னைநீராவிக் கிராமத்திற்கு 2017ம் ஆண்டிலாவது மேலும் இரு கிராம சேவகர்களை நியமிக்க உரியவர்கள் ஆவண செய்யவேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை முன்வைக்கின்றனர்.

இதுதொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவர்கள்,
கிளிநொச்சி மாவட்டம் கண்டாவளைப் பிரதேச செயலாளர் பிரிவின் கீழ் உள்ள புன்னைநீராவிக் கிராமத்தில் மட்டும் 2 ஆயிரத்து 69 குடும்பங்களைச் சேர்ந்த 6 ஆயிரத்து 200 அங்கத்தவர்கள் வாழ்கின்றோம். இவ்வாறு வாழும் இக் கிராமம் ஒரு கிராம சேவகர் பிரிவிற்குட்பட்ட பகுதியாகவே இன்றுவரை விளங்குகின்றது. இதன் காரனத்தினால் இம் மக்களிற்கான ஒட்டு மொத்த சேவைக்கும் ஒரு கிராம சேவகரே சேவையாற்றுகின்றார்.

இவ்வாறு சேவை புரியும் கிராம அலுவலர் அலுவலத்தில் தினமும் நூற்றுக்கணக்கான மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தே எமது சேவையை பெறவேண்டியுள்ளது. இதனால் மணிக்கணக்கு அன்றி சில சந்தர்ப்பத்தில் நாள்கணக்கில் காவல் இருக்கவேண்டிய சூழல் ஏற்படுகின்றது. கிராம சேவகரும் காலையில் அலுவலகம் வந்தால் பணியை முடித்து இரவு நேரமே வீடு திரும்புவதனால் அவரிடம் இருந்தும் எம்மால் கேள்வியை தொடுக்க முடியவில்லை.

இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுவதற்கான காரணம் ஒரு கிராமத்தில் அதிக மக்கள் தொகையாக காணப்படுவதே ஆகும். நாம் நம்புகின்றோம் இலங்கையிலேயே அதிக மக்களைக் கொண்ட கிராம சேவகர் பிரிவு எமது பிரிவாகவே இருக்க முடியும். எனவே எமது அண்றாட பணிகளை உடனுக்குடன் நிறைவு செய்யும் வகையில் எமது கிராம சேவகர் பிரிவினை குறைந்த பட்சம் மூன்று பிரிவுகளாக பிரிக்க வேண்டிய தேவை உள்ளது என்பதனை பல சந்தர்ப்பத்திலும் நாம் சுட்டிக்காட்டியுள்ளோம். அது மட்டுமன்றி பிரதேச , மாவட்ட மட்டத்திலான ஒருங்கிணைப்புக் குழுக்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றுள்ளோம்.
இந்த நிலையில் எமது கிராம மக்களின் நெருக்கடியினைக் கருத்தில் கொண்டு 2017ம் ஆண்டிலாவது எமது கிராம சேவகர் பிரிவினை மூன்று பிரிவுகளாகப் பிரிந்து மூன்று கிராம சேவகர்களை நியமிக்க வேண்டும் . எனக் கோரிக்கை முன்வைக்கின்றோம் என்று தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு குறித்த கிராம மக்களால் முன்வைக்கப்படும் கோரிக்கை தொடர்பினில் கண்டாவளைப் பிரதேச செயலாளர் முகுந்தனுடன் தொடர்பு கொண்டு கேட்டபோது ,
புன்னைநீராவி கிராம சேவகர் பிரிவினில் 2 ஆயிரம் குடும்பத்தைச் சேர்ந்த 6 ஆயிரம் அங்கத்தவர்கள் வாழ்கின்றதான தகவல் சரியானதே. இது தொடர்பினில் குறித்த கிராம அமைப்புக்கள் பலவும் பலமுறை எமது கவனத்திற்கும் குறித்த விடயம் தொடர்பினில் சுட்டிக்காட்டினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com