சற்று முன்

‘கடமையைச் செய்யுங்கள்! பலனை எதிர்பாராதீர்கள் என்கிறார் சிறிதரன்!

குரங்குகளை அடைக்கும் இரும்புக் கூட்டுக்குள் வடக்கின் தமிழ்மக்களை அடைக்கவேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அமைச்சர் டி.எம் சுவாமிநாதனிடம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் நேற்று முன்தினம் உற்பத்தி வரிகள் விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன், தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக பேசிய போது சிறைச்சாலைகள் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சருடன் வாக்குவாதம் ஏற்பட்டது.

இதன்போது தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாக தான் தனது கடமையைச் சரிவரச் செய்துள்ளதாக அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் தெரிவித்தபோது, ஐயா ‘கடமையைச் செய்யுங்கள், பலனை எதிர்பாராதீர்கள் என சிறிதரன் தெரிவித்தார்.

இதனையடுத்து, அரசியல் கைதிகளின் விசாரணைகள் துரிதகதியில் இடம்பெறும் என அமைச்சர் சுவாமிநாதன் தெரிவிக்கையில், ஐயா, கடவுள் உங்களுக்கு அருள் புரியட்டும் என சிறிதரன் தெரிவித்தார்.

இந்நிலையில், திடீரென அமைச்சர் சுவாமிநாதன் வடக்கில் பொருத்து வீட்டினை வழங்கினால் அதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எதிர்ப்புத் தெரிவிக்கிறார்கள் எனக் கூறியபோது, இடையே குறுக்கிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் இது பொருத்துவீடுகள் அல்ல இரும்புக் கூடுகள். வடக்கில் யாரும் இரும்புக் கூடுகளில் வாழ்வதில்லை. நாய், பூனை, கிளி, குரங்குகள் போன்றவைகளைத்தான் இரும்புக் கூடுகளில் அடைத்து வைத்திருப்பார்கள் என்றார்.

இதற்கு அமைச்சர் சுவாமிநாதன் பதில் கூற முற்பட்டவேளை சபாநாயகர் இதற்கு அனுமதி வழங்கவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

vakeesam Like Page close[x]
Or wait 30 seconds
Social Media Auto Publish Powered By : XYZScripts.com