சற்று முன்
Home / செய்திகள் / கடந்த வருடம் 40 ஆயிரம் வீதி விபத்துக்கள் ! 7500 பேர் காயம் !! 3100 பேர் பலி !!!

கடந்த வருடம் 40 ஆயிரம் வீதி விபத்துக்கள் ! 7500 பேர் காயம் !! 3100 பேர் பலி !!!

சாரதிகள் மற்றும் பாதசாரிகளினால் வீதி ஒழுங்குவிதிகள் சமிஞ்சைகளை முறையாக கடைப்பிடிக்காததன் பெறுபேறாக 2017ஆம் ஆண்டில் சுமார் 40 ஆயிரம் வீதிவிபத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

இதற்கு மேலதிகமாக வீதி வாகன விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 3,100 ஆகும் . மேலும் சுமார் 7,500 பேர் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். 2922 வாகன விபத்துக்களில் 3100 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸ் தலைமையக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

பொலிஸ் தலைமையக வாகனப்பிரிவின் மூலம் வீதிச் சட்டங்களை முறையாக கடைப்பிடிக்காதோர் குறித்து பொலிஸார் மேற்கொண்ட நடவடிக்கையின்போது சுமார் 1 இலட்சம் பேர் அடையாளங்காணப்பட்டதாகவும் பொலிஸ் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.

பொலிஸாரின் கண்காணிப்பு நடவடிக்கையில் சிக்காதோர் மேலும் பலர் கடந்தவருடத்தில் இருந்திருக்ககூடும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வீதிவிபத்துக்களை மீறியவர்கள் தொடர்பாக தண்டப்பணம் விதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 இலட்சத்து 40 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்களில் பெரும்பாலானவை மதுபோதை மற்றும் கவலையீனத்தால் ஏற்பட்ட விபத்துக்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர். முச்சக்கரவண்டி விபத்துக்களை பொறுத்தவரையில் பெரும்பாலான முச்சக்கர வண்டிகள் குறிப்பிட்ட எண்ணிக்கையிலும் பார்க்க பயணிகளை அழைத்துச்சென்றமை மற்றும் வீதி ஒழுங்கு விதிகளை கவனத்தில் கொள்ளாமையே காரணம் ஆகும்.

மோட்டார் சைக்கிள் விபத்துக்களும் பெருமளவில் இடம்பெற்றுள்ளன. வீதி ஒழுங்கு முறைகளை கடைப்பிடிக்காது வாகனங்களை செலுத்திய சாரதிகள் மாத்திரம் அன்றி இவ்வாறான தவறுகளை விளைவித்த பாதசாரதிகளுக்கு எதிராகவும் சட்டத்தை கடுமையான நடைமுறைப்படுத்துவதற்கும் பொலிஸ் வாகப்பிரிவிற்கும் ஆலோசனை வழங்கப்பட்டள்ளது.

தலைக்கவசம் அணியாமை ,வாகன பாதுகாப்பு பட்டி அணியாமை, வாகன அனுமதிப்பத்திரம் இல்லாமை, காப்புறுதி சான்றிதழ் இல்லாமைஆகியவற்றுடன் வாகனங்களை செலுத்தும் சாரதிகளுக்கு எதிராகவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பாதசாரிகளுக்கான வீதிக்கடவைகளில் விடுத்து வேறு இடங்களில் வீதியைக் கடப்போர் வீதி சமிக்ஞைகளின் போது அவற்றை கவனத்தில் கொள்ளாது வீதியைக் கடத்தல் , பாதசாரிகளுக்கான நடைபாதை பயன்படுத்தாமை போன்ற சேவைகளில் ஈடுபடும் பெரும்எண்ணிக்கையிலான பாதசாரிகள் தொடர்பிலும் வாகனப்போக்குவரத்து பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இந்த விடயங்களை பொதுமக்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com