சற்று முன்
Home / செய்திகள் / “கடந்த ஆட்சியில் யாழ் மாநகரசபையின் முறையற்ற நியமனங்கள்” – விசாரணைக்கு உத்தரவு

“கடந்த ஆட்சியில் யாழ் மாநகரசபையின் முறையற்ற நியமனங்கள்” – விசாரணைக்கு உத்தரவு

2013ஆம் 2014ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் மாநகர சபையில் இடம்பெற்ற நியமனங்கள் சிலவற்றில் உரிய விதிமுறைகளை பின்பற்றவில்லை எனத் தெரிவித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர சபையில் மின் இணைப்பாளர் மற்றும் பொறியியலாளர்கள் நியமனத்தின்போது கோரப்பட்ட விண்ணப்பங்களில் உரிய பதவிக்கான தகமைகள் குறைக்கப்பட்டு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதோடு மற்றுமோர் பணிக்கு குறைந்த கல்வித் தகமை கொண்டவர்களும் உள்வாங்கப்பட்டுள்ளனர்.

இவ்வாறு இடம்பெற்ற நியமனத்தில் உள்வாங்கப்பட்ட பொறியியலாளர் நிறுத்தப்பட்டுள்ளபோதும் மின் இணைப்பாளர்கள் தொடர்ந்தும் பணியாற்றுகின்றனர்.

இதனால் குறித்த விடயம் கணக்காய்வு அறிக்கைக்கு உட்படுத்தப்பட்ட நிலையில் சர்ச்சைக்கு உட்பட்டுள்ளது. இதனையடுத்து குறித்த விடயம் கோப் கணக்காய்வு குழுவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் கோப் குழு இரு விடயங்களிற்கும் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளனர்.

அவ் உத்தரவிற்கமைய பொறியியலாளர் நியமனம் தொடர்பில் பிரதம செயலாளரும் மின் இணைப்பாளர் நியமனம் தொடர்பில் மாகாண உள்ளூராட்சி ஆணையாளரும் விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கோரப்பட்டுள்ளதற்கமைய இரு விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை யாழ் மாநகரசபையில் கடந்த ஆட்சிக்காலத்தின்போது மேற்கொள்ளப்பட்ட நியமனங்கள் – அவ் நியமனங்கள் எந்த விதிமுறைகளின் கீழ் மேற்கொள்ளப்பட்டன, மேலதிகமான நியமங்கள் உள்ளனவா, கல்வித் தகுதியற்ற நியமனங்கள் உள்ளனவா உள்ளிட்ட விடயங்களை தகவல் அறியும் சட்டம் ஊடாக கடந்த மாதம் யாழ் மாநகரசபயில் விண்ணப்பித்திருந்தோம்.

அவற்றினை ஆராய்ந்து எமக்கு பதிலளிப்பதற்கான தாயார்ப்படுத்தல்கள் மேற்கொண்டபோதே குறித்த விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்ததாக யாழ் மாநகரசபையின் பெயர் குறிப்பிட விரும்பாத அதிகாரி ஒருவர் வாகீசத்திற்குத் தெரிவித்தார்.


எனினும் தகவல் அறியும் உரிமைச்சட்டத்தின் மூலமான எமது விண்ணப்ப கோரிக்கைகளுக்கு பதிலளிப்பதை தவிர்த்துள்ள யாழ் மாநகரசபையினர் அவற்றினை காலந்தாழ்த்திவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி

மாவீரர்நாள் 2021 நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன்

Social Media Auto Publish Powered By : XYZScripts.com