கடந்த அரசாங்க காலத்தில் முன்னெடுக்கப்பட்ட வேலைத்திட்டங்களை இப்போது செய்கிறார்கள்

IMG_3965இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் 77 வருட காலமாக மக்களுக்கு சேவைகள் செய்து வருகின்றது. இன்று அரசியலில் ஒரு மாற்றம் ஏற்பட்டிருந்தால் கூட மக்கள் ஏமாற்றம் அடைந்து காணப்படுகின்றனர் என மத்திய மாகாண சபை உறுப்பினர் எ.பி சக்திவேல் தெரிவித்தார்.

11.05.2016 அன்று கொட்டகலை சீ.எல்.எப் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற இ.தெ.கா வின் ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர்களான பி.சக்திவேல், கணபதி கனகராஜ், ஏ.பிலிப்குமார், புதிதாக கட்சியில் இணைந்து கொண்ட முன்னால் நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் என்.சதாசிவன், முன்னால் பிரதேச சபை உறுப்பினர் மலர்வாசகம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அவர் மேலும் தெரிவிக்கையில்…

ஒரு தொழிற்சங்க பிரச்சினையை அரசியலாக்கி ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர். சம்பள பிரச்சினைகளுக்கு பல கட்சிகள் குரல் கொடுத்திருந்தாலும் கூட அதற்கு எந்த தீர்வையும் அவர்கள் காணவில்லை.

இலங்கை தொழிலாளர் காங்கிரசுடன் கூட்டு தொழிற்சங்களில் இரண்டு கட்சிகள் அதாவது, ஐக்கிய தேசிய கட்சியின் தொழிற்சங்க கட்சியூடாகவும், கூட்டு கமிட்டி ஊடாகவும் சௌமிய மூர்த்தி தொண்டமான் காலத்திலிருந்து தொழிலாளர்களுக்கான சம்பளத்தை முறையாக பெற்று வந்துள்ளோம்.

புதிய அரசியலில் ஈடுப்படுபவர்களுக்கு தொழிற்சங்கங்கள் பற்றிய கூடிய தெளிவில்லை. இதில் இலங்கை தொழிலாளர்களின் உரிமை கூடுதலாக உள்ளடக்கப்பட்டுள்ளது.

சம்பள பிரச்சினையை மட்டும் உள்ளடக்கப்பட்ட ஒரு விடயமில்லை. குழந்தை பிறக்கும் முதல் அவர்கள் வாழ்வாதாரத்தில் இறுதி காலம் வரை விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

தொழில் பிரச்சினை, வீடமைப்பு பிரச்சினை, தொழில் செய்யும் நேரங்களின் பிரச்சினை ஏனைய சலுகைகள் அதில் உள்ளடங்கப்பட்ட ஒரு விடயமாகும். இதில் சம்பளம் என்ற ஒரு பிரச்சினை மாத்திரம் கடந்த மார்ச் 31ம் திகதி முதல் நிறைவு பெற்றுள்ளது.

நிச்சயம் இ.தொ.கா எமது தொழிலாளர்களுக்கான சம்பளத்தை நிலுவை கொடுப்பனவுடன் பெற்று தரும். இதற்கான பேச்சுவார்த்தைகள் இ.தொ.காவால் நடத்தப்படும்.

அண்மைகாலமாக சிலர் தொழிலாளர்களுக்கு சம்பள பிரச்சினை பெற்று தரப்படும், காணி பிரச்சினை தீர்க்கப்படும், காணிகளுக்கு உறுதி பத்திரமும் பெற்று தரப்படும் என சொல்லிக்கொண்டு வருகின்றார்கள்.

ஆனால் இவை அனைத்தும் இப்பொழுது ஆமை வேகத்தில் இடம்பெற்று வருகின்றது. அண்மை காலத்தில் பாராளுமன்றத்தில் வாசு தேவ நாணயக்கார தோட்ட தொழிலாளர்களுக்கு 7 பேர்ச் காணி தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு ஊடகங்கள் ஊடாக தெரிந்து கொண்டு நானும் பதிலளித்தேன். நடைமுறையில் இன்றைய காலத்தில் 7 பேர்ச் காணி வழங்கப்படுமாயின், அதில் ஒரு வீதி அமைப்பதற்கு கூட கட்டிட நிர்மாண ஆய்வு திணைக்களத்தின் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்று. ஒரு படிக்கட்டு கட்டுவதாக இருந்தாலும் கூட அது எந்த இடம் அவ் இடம் சாய்வான இடமா அல்லது தரை மட்டமா என்பதை ஆராய்ச்சி செய்து பார்க்க வேண்டும்.

தொழிலாளர்களுக்கு இருக்கும் லயத்தை ஒழித்து 7 பேர்ச் காணியில் வீடு கட்டி தாரேன் என்று சொன்னால் அதை செய்து இருக்க வேண்டும். இதற்காக ஏனைய பதில்களை கூறி சமானிப்பதை நாம் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.

மக்கள் அங்கீகாரம் கொடுத்து அமைச்சு பொறுப்புகளை பெற்றவர்கள் இதற்கெல்லாம் காரணம் சொல்ல வேண்டும். இது தொடர்பாக பாராளுமன்ற அறிக்கையில் விடலாம். ஆனால் சாதாரண மக்களுக்கு கூட இது தொடர்பாக தெரியும். சாய்வான இடங்கள், சரிவான இடங்களில் கட்டிட நிர்மாண ஆய்வு திணைக்களத்தின் சான்றிதழ் இல்லாமல் வீடுகள் கட்ட முடியாது என்று.

யார் எதை சொன்னாலும் மலையகத்து மக்கள் தாங்கள் செய்த தவறை இப்பொழுது உணர்ந்துள்ளார்கள்.

தேர்தல் காலத்தில் விட்ட அந்த தவறை உணர்ந்து யார் மலையகத்துக்கு சேவை செய்தார்கள் என்ற அங்கீகாரத்தையும், ஆதராவையும் தந்துள்ளனர். இதற்கு நுவரெலியாவில் நடந்து முடிந்த மேதின விழா கூட்டம் பறைசாற்றியுள்ளது.

இக்கூட்டத்தில் பெருந்திரளான மக்களுடன் சுமார் 45 ஆயிரத்துக்கு அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளார்கள் என்பது உண்மை. நீண்டு காலம் இருந்தவர்கள் எல்லாம் எம் கட்சியுடன் வந்து இணைந்துக்கொண்டுள்ளார்கள்.

நுவரெலியா பிரதேச சபை தலைவராகவும் மலையக மக்கள் முன்னணியின் நிர்வாக உறுப்பினராகவும் இருந்த என்.சாதாசிவன் இணைந்துள்ளார். அதேபோன்று நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக இருந்த ராஜாதுரையும் இணைந்துகொண்டுள்ளார். இதேபோன்று இன்று நுவரெலியா பிரதேச சபையின் உறுப்பினர் ஒருவரும், மலையக மக்கள் முன்னணியின் உயர் மட்ட குழு உறுப்பினர்களும் என மூவர் இணைந்து கொண்டுள்ளார்கள். இவர்களை நாம் வரவேற்கின்றோம்.

நிச்சயமாக மலையக மக்களின் பிரச்சினைகளுக்கு பேரம் பேசும் சக்தி ஒன்று காங்கிரசிடம் இருந்தது. அது தற்பொழுது மலையக மக்களிடமும், தலைமைகளிடமும் இருந்தும் விலகி சென்றுள்ளது.

இப்பொழுது நழுவல் அரசியலை எடுத்து செல்கின்றார்கள். ஒரு பிரச்சினையை அணுக முடியாத நிலையில் எதை சொன்னாலும் அதற்கு ஒரு காரணத்தை சொல்லி நழுவும் நிலை இப்பொழுது ஏற்பட்டுள்ளது.

இந்திய வீடமைப்பு திட்டத்தை எடுத்துக்கொண்டமானால் இந்தியா தமிழ் நாட்டிலிருந்து பாராளுமன்ற குழுக்களின் உறுப்பினர்களான டி.எம்.கே.பாலு தலைமையிலான குழுவில் திருமதி கனிமொழி, திருமாளவன் அதேபோன்று இளங்கோ போன்ற உறுப்பினர்கள் நாட்டிற்கு வரும் பொழுது அவர்களை மலையகத்திற்கு அழைத்து வந்தவர் எங்கள் தலைவர் ஆறுமுகன் தொண்டமான். மலையகத்தின் நிலைமையை உணர்த்தியவர்கள் இ.தொ.கா தான்.

அப்பொழுது அவர்கள் எந்த தோட்டங்களுக்கு சென்றார்களோ, எந்த பிரதேசங்கள் எல்லாம் இனங்கண்டார்களோ அங்கு தான் இந்த இந்திய வீடமைப்பு தற்பொழுது நடைபெற்று வருகின்றது.

இவ்விடயம் அனைத்து ஊடகங்களுக்கும் தெரியும் அணைவருக்கும் தெரியும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஷ்மா சிவராஜை அழைத்து அட்டன் டீ.கே.டபிள்யூ மண்டபத்தில் இத்திட்டத்தை முன்வைத்தவர் ஆறுமுகன் தொண்டமான் தான்.

அதேபோன்று இந்திய முன்னால் பிரதமர் மன்மோகன் சிங், இந்திய காங்கிரஸின் தலைவி சோனியா காந்தி, தமிழ் நாட்டு காங்கிரஸ் உறுப்பினர் ஞானதேசிகன் ஆகியோரை சந்தித்து வடக்கு, கிழக்கு மாத்திரமல்ல மலையகத்திலும் 15 இலட்சம் மக்கள் அதுவும் இந்திய வம்சாவளி மக்கள் தாய் நாடை இந்தியாவாக கொண்டு தொப்புள் கொடி உறவில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்று இந்த 4000 வீடமைப்பு திட்டத்திற்கான முன்னெடுப்புகள் எங்களால் செய்யபட்டது.

கடந்த அரசாங்கத்தில் டென்டர் மூலமாக கொண்டு வரப்பட்ட வேலைத்திட்டங்களே தற்பொழுது முன்னெடுக்கப்படுகின்றது. புதிதாக எந்த திட்டங்கள் நடைமுறைப்படுத்தவில்லை. இந்த வீடமைப்புகள் எல்லாம் கடந்த அரசாங்க காலத்தில் நாங்கள் கொண்டு வந்த திட்டங்கள். 7 பேர்ச் என்று கூறுகின்றார்கள் ஆனால் ஸ்டோனிகிளிப் தோட்டத்தில் நாம் 20 பேர்ச்சில் வீடுகள் அமைத்துக்கொடுத்துள்ளோம்.

மாடி வீடுகள் பல இடங்களில் இருக்கின்றது. மலையகத்திலும் மட்டும் இருக்க கூடாதா? எனவே இதெல்லாம் மற்றவர்கள் சொல்கின்ற கேலி கூத்தாக இருக்கின்றது.

தலவாக்கலையில் மேடைகளில் சொன்னதை கூட தற்பொழுது இல்லை என கூறுகின்றார்கள். எது எவ்வாறாக இருந்தாலும் மலையக தோட்ட தொழிலாளர்களுக்கு இ.தொ.கா தான் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்கும். நிச்சயமாக மலையக மக்களின் அபிவிருத்தி திட்டங்களையும் முன்னெடுக்கும் சக்தியாக இ.தொ.கா விளங்கும் என ஊடகவியலாளர் சந்திப்பில் மத்திய மாகாண சபை உறுப்பினர் ஏ.பி.சக்திவேல் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com