கட­லோரப் பாது­காப்பை பலப்படுத்த இலங்கை தீவிரம்!

கட­லோரப் பாது­காப்பை  பலப்­ப­டுத்த இலங்கை கடற்­படை  நவீன போர்க்­கப்­பல்­களை கொள்­வ­னவு செய்யும் முயற்­சி­களை முன்­னெ­டுத்­துள்­ளது.

இந்த ஆண்டில் மூன்று கட­லோர பாது­காப்பு கப்­பல்­களை கொள்­வ­னவு செய்­துள்ள  நிலையில் அடுத்த ஆண்டில் இந்­தியா, ஜப்பான், சீனா  மற்றும் அவுஸ்தி­ரே­லியா ஆகிய நாடு­களில் இருந்தும் புதியரக கப்­பல்­களை கொள்­வ­னவு செய்­ய­வுள்ளது.

இலங்கை கடல் எல்­லையில் அதி­க­ளவில் இடம்­பெற்று வரு­வ­தாக கூறப்­படும் ஆட்­க­டத்தல் மற்றும் போதைப்­பொருள் கடத்தல் என்­ப­வற்றை கட்­டுப்­ப­டுத்தும் வகையில் இலங்கை கடற்­படை செயற்­பட்டு வரு­கின்ற போதிலும் கடல் எல்லை பாது­காப்பை உறு­திப்­ப­டுத்த புதிய பாது­காப்பு கப்­பல்­களை கொள்­வ­னவு செய்ய தீர்­மா­னித்­துள்­ள­தாக இலங்கை கடற்­படை தெரி­வித்­துள்­ளது.

இந்த ஆண்டில் இது­வ­ரையில்  மூன்று கட­கோர பாதுகாப்பு கப்­பல்­களை இலங்கை கடற்­படை கொள்­வ­னவு செய்­துள்­ளது. இந்­தி­யா­விடம் இருந்து இரண்டு கப்­பல்­களும் நேற்று முன்­தினம் ஜப்பான் நாட்டில் இருந்து ரோந்துக் கப்­பலும்  கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளன.

அடுத்த ஆண்டு மேலும் சில ரோந்துக் கப்­பல்­களை கொள்­வ­னவு செய்­யவும் தீர்­மானம் எடுக்­கப்­பட்­டுள்­ள­தாக கூறப்­ப­டு­கின்­றது. அடுத்த ஆண்டு பெப்­ர­வரி மாதம் இந்­தியா மேலும் ஒரு பாது­காப்பு கப்­பலை இலங்­கைக்கு வழங்­க­வுள்­ள­துடன் ஜப்பான், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகளில் இருந்து ரோந்துக் கப்பல்களை கொள்வனவு செய்யவுள்ளதாக கடற்படை ஊடக மையம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

Social Media Auto Publish Powered By : XYZScripts.com