சற்று முன்
Home / செய்திகள் / கஜேந்திரன் எம்.பி கைது – அவர் மீது பொலிசார் தாக்குதல்

கஜேந்திரன் எம்.பி கைது – அவர் மீது பொலிசார் தாக்குதல்

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தியாக தீபம் திலீபனுக்கு சுடரேற்ற முற்பட்ட நிலையிலேயே கைதாகியுள்ளார்.

முன்னதாக குறித்த பகுதியில் பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்கள் இன்றைய தினம் அஞ்சலி செலுத்த சென்ற போது , அதற்கு பொலிஸார் தடை விதித்தனர்.

நீதிமன்ற தடையுத்தரவு இன்றி என்னை தடுக்க முடியாது என கூறி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தடைகளை மீறி அஞ்சலி செலுத்த முற்பட்ட வேளை அவரையும் அவருடன் சென்றவர்களையும் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்படும்போது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளார். இதேவேளை அவருடன் அங்கு நின்றிருந்த யாழ்.மாநகரசபை உறுப்பினர் ரஜீவ் காந் மற்றும் கட்சி உறுப்பினர் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, செல்வராசா கஜேந்திரன் மற்றும் கட்சியின் பெண் உறுப்பினர்கள் பொலிஸாரால் கடுமையாகத் தாக்கப்பட்டதாகவும் பெண் உறுப்பினர்களின் கைத் தொலைபேசிகளை பொலிஸார் பறித்ததாகவும் கட்சியின் ஊடகப் பேச்சாளர் சுகாஸ் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், மாநகரசபை உறுப்பினர் உட்டவர்களிடம் பொலிஸார் வாக்குமூலம் பெற்றுவருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவித்தன.

About Jaseek

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

*

x

Check Also

கஜேந்திரன் எம்.பிக்கு பிணை !

யாழ்ப்பாணம் நல்லூரில் கைது செய்யப்பட்ட தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ...

Social Media Auto Publish Powered By : XYZScripts.com